விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. அதிலும் சனி, ஞாயிறு கிழமைகளை கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் காட்சியை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும். இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
20-வது நாளாக தொடரும் பிக்பாஸ் வீட்டில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், நாங்க கொடுத்த தான் நீங்க சாப்பிடணும் என பஞ்சாயத்தை ஆரம்பிக்கிறார் யுகேந்திரன். இதையடுத்து அவருக்கும் மாயாவுக்கும் இடையில் வாக்குவாதம் முற்றுகிறது. அந்த வீட்டுக்காக தான் நீங்க விளையாடுறீங்களா என மாயா கேக்க, அவங்க இவ்வளவு நேரம் சாப்பாடு இல்லாம இருந்தாங்க தானே. இப்ப சாப்பிட சொல்லியாச்சு என யுகேந்திரன் கூற, யார் சொன்னா என வம்பிழுக்கின்றனர் மாயாவின் கூட்டணி.
இறுதியில் இது தான் ரூல். கேப்டனுக்கு பவர் இருக்கு என சொல்லி முடிக்கிறார் யுகேந்திரன். இது ஜோவிகாவின் ஐடியாவா தன இருக்கும். நீங்க சாப்பிட்டுல கைய வைச்சி பாருங்க என மாயா கதறுகிறார். இதுதான் இன்றைய நாளுக்கான ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.