fbpx

மனைவியை வேலைக்கு செல்லுமாறு கட்டாயப்படுத்த முடியாது..!! கணவரின் மனு தள்ளுபடி..!! உயர்நீதிமன்றம் அதிரடி..!!

பட்டதாரி மனைவியை வேலைக்குச் செல்லுமாறு கணவர் கட்டாயப்படுத்த முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த தம்பதியினர் அண்மையில் விவாகரத்து பெற்றனர். அந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. விவாகரத்து பெற்றதால், மனைவிக்கு ஜீவனாம்சமாக கணவர் மாதந்தோறும் ரூ.25,000 வழங்க குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், ஜீவனாம்சத்தை ரூ.15,000-ஆக குறைக்க வலியுறுத்தி, டெல்லி ஐகோர்ட்டில் கணவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனது மனைவி பி.எஸ்சி பட்டதாரி என்பதால், அவரால் வேலைக்குச் செல்ல முடியும். எனவே, ஜீவனாம்சத்தை ரூ.15,000-ஆக குறைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனைவி ஒரு பட்டதாரி என்பதால், அவரை வேலைக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்தனர். மேலும், கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக மனைவி வேலைக்குச் செல்ல மறுப்பதாக முன்கூட்டியே அனுமானிக்க முடியாதும் என்றும் கூறினர். பின்னர் கணவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஜீவனாம்சத்தை உயர்த்தி தர வேண்டுமென மனைவி முன்வைத்த கோரிக்கையையும் நிராகரித்தனர்.

Chella

Next Post

’பெரியாரை காலணியால் அடிக்க வேண்டும்’..!! மீண்டும் கைதாகிறார் சாட்டை துரைமுருகன்..!!

Thu Oct 26 , 2023
தந்தை பெரியாரை காலணியால் அடிக்க வேண்டும் என பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை கைது செய்யக்கோரி வேலூர் போலீசில் திராவிடர் விடுதலை கழகத்தினர் புகார் கொத்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பொது மேடைகளில் பெரியார் ஒரு வழிகாட்டி. தமிழருக்கு தலைவர். அவரும் சமூக விடுதலைக்குப் போராடியவர் என பேசுவார். சில ஆண்டுகளில் பெரியாருக்கு வணக்க நிகழ்வுகளை நாம் தமிழர் கட்சி நடத்தும். […]

You May Like