கணவரை விட மனைவிமார்கள் வேலைக்கு சென்று அதிகளவு ஊதியம் பெறுவதால் விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், 441 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு, 9 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. இந்த முகாமில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான பூர்ணிமா கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போதைய காலகட்டத்தில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். கணவரை விட மனைவிமார்கள் வேலைக்கு சென்று அதிகளவு ஊதியம் பெறுவதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல் ஈகோ பார்ப்பதால் விவாகரத்து வழக்குகள் அதிகளவில் நீதிமன்றத்திற்கு வருவதாக வேதனை தெரிவித்தார்.