fbpx

மனைவிக்கு கொரோனா தொற்று..! ஜி-20 மாநாட்டில் பங்கேற்பாரா ஜோ பைடன்…! வெளியான அறிவிப்பு…!

அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் மனைவியும் அமெரிக்கா முதல் பெண்மணியுமான ஜில் பைடனுக்கு கோவிட்-19 பரிதோனை மேற்கொள்ளப்பட்டுள்ளது இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது, அவர் லேசான அறிகுறிகளை அனுபவித்து வருகிறார். அதே நேரத்தில் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கோவிட் -19 பரிசோதனையில் அவருக்கு எந்த பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் உச்சிமாநாட்டில் பங்கேற்க இருந்தார், ஆனால் தற்போது அதிபரின் மனைவிக்கு கோரோனா தோற்று ஏற்பட்டுள்ள நிலையில் அவர் பங்கேற்பாரா போன்ற கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில் இது குறித்து வெள்ளை மாளிகை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை இந்தியாவுக்குப் புறப்படுகிறார். அதிபர் பைடன்-பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையேயான இரு தரப்பு பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை (செப்.8) நடைபெறுகிறது. தொடர்ந்து, செப். 9- 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டு அமர்வுகளில் அவர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் மாநாடு நடைபெறும் அரங்கிலும் பிற தலைவர்களை சந்திக்கும்போதும் கரோனா பரவல் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிபர் பைடன் முகக்கவசம் அணிந்திருப்பார் என வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

Gpay, Paytm பயன்படுத்தும் நபர்களுக்கு குட் நியூஸ்..‌.! ATM மூலம் பணம் வசதி...! முழு விவரம்

Wed Sep 6 , 2023
UPI பயன்படுத்தி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வசதி விரைவில் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பணமில்லா மற்றும் விரைவான டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவை அறிமுகமானதிலிருந்து மக்கள் பரிவர்த்தனை செய்யும் முறையை மாற்றியுள்ளன. எடுத்துக்காட்டாக, Google Pay , Paytm மற்றும் PhonePe போன்ற UPI சேவைகள் பல்வேறு பரிவர்த்தனைகளுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. தற்பொழுது முதல்முறையாக UPI பயன்படுத்தி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வசதி விரைவில் நாடு […]
இனி ஃபோன் நம்பரே தேவையில்லை..!! ஈசியா பணம் அனுப்ப இப்படி ஒரு வழியா..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

You May Like