fbpx

மனைவி விதவையாகிவிட கூடாது!… மரணத்திற்கு முன்பு விவாகரத்து!… பொருளாதார தேவைகளையும் பூர்த்திசெய்த கணவர்!

தெலங்கானாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர், மரணத்திற்கு முன்பே மனைவிக்கு விவாகரத்து உட்பட பொருளாதார ரீதியான தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுத்த சம்பவம் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கனா மாநிலம் கம்மத் நகரை சேர்ந்தவர் ஹர்ஷ்வர்தன். 33 வயதான இவர் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கும் ஹேமா என்ற பெண்ணிற்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது. பிறகு ஆஸ்ரேலியாவுக்கு சென்ற ஹர்ஷ்வர்தன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பிறகு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. 2 ஆண்டுகளில் மரணம் அடைந்துவிடுவோம் என்பதை அறிந்த ஹர்ஷ்வர்தன் இந்த அதிர்ச்சியான தகவலை தன்னுடைய பெற்றோர் மற்றும் மனைவியிடம் கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய மனைவி இளம்வயதிலேயே விதவை ஆகிவிட கூடாது என்று எண்ணி ஹர்ஷ்வர்தன் இறப்பதற்கு முன்பே மனைவி ஹேமாவுக்கு விவாகரத்து கொடுத்துவிட்டு பொருளாதார ரீதியாக அவருக்கு தேவயானவற்றை செய்துகொடுத்துள்ளர். அதுமட்டுமின்றி ஆஸ்ரேலியாவில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும்போதே ஹர்ஷ்வர்தன் 3 லட்சம் செலவு செய்து தனது உடலை இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார். மார்ச் 24-ஆம் தேதி உயிரிழந்த ஹர்ஷ்வர்தன் உடல் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு கடந்த 5-ஆம் தேதி சொந்த ஊரில் அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Kokila

Next Post

சூடான டீ பிரியரா நீங்கள்?... இந்த சூடான செய்தியை கொஞ்சம் ஆற அமர படியுங்கள்!

Tue Apr 11 , 2023
அதிக சூடாக டீ குடிப்பவர்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் (Oesophagus cancer) வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. புற்றுநோயின் பல்வேறு வகைகளில் ஒன்று உணவுக்குழாய் புற்றுநோயாகும். இந்நோயால் உலகில் ஆண்டுக்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். வாய் முதல் இரப்பை வரையுள்ள உணவுக்குழாய் மிக மிருதுவானது. அதிக சூடாக டீ குடிப்பதால் உணவுக்கழாயின் சுவர்கள் அரிக்கப்பட்டு திசுக்கள் பலவீனமாகின்றன. இதனால் கேன்சர் கட்டி ஏற்படும் அபாயமுள்ளது. பான்பராக், புகையிலை […]
திடீரென்று காஃபி குடிப்பதை நிறுத்தினால் என்ன நடக்கும்..? அதிக நன்மைகளும்.. சில தீமைகளும்..!! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

You May Like