தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பகுதியில் இருக்கும் பெத்தப்பள்ளி மாவட்டம் ஸ்வர்ண பள்ளியில் வசிக்கும் அகிலா, ஸ்ரீகாந்த் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். இந்த கல்யாணத்திற்காக ஸ்ரீகாந்த் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சென்று வேறொரு பெண்ணை கல்யாணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது பற்றி அறிந்த அகிலா, லாவகமாக பேசி தனது இல்லத்திற்கு ஸ்ரீகாந்தை அழைத்து வந்து, மின் கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்துள்ளார்.
அதிலும் ஆத்திரம் அடங்காத அகிலா, ஸ்ரீகாந்த் கழுத்தில் செருப்பு மாலை போட்டு அசிங்கப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஸ்ரீகாந்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.