fbpx

மனைவியின் கிட்னியை விற்று வேறு பெண்ணுடன் வாழ்க்கை…. கிட்னியில் கல் இருப்பதாக நம்ப வைத்து… கணவர் செய்த செயலால் அதிர்ச்சி ….

ஒடிசாவில் வேறொரு பெண்ணுடன் வாழ பணம் இல்லாததால் மனைவியை ஏமாற்றி கிட்னியை விற்ற கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஒடிசா மாநிலத்தில் கோடமேட்டா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். வங்கதேசத்தைச் சேர்ந்த இவர் ஒடிசாவுக்கு அகதியாக வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் ரஞ்சிதா என்பவருக்கும் திருமணம் நடந்தது. அப்போதுதான் இவர் மது போதைக்கு அடிமையானவர் என்ற விஷயம் ரஞ்சிதாவுக்கு தெரியவந்தது.

இருந்தாலும் இவருடன் குடும்பம் நடத்த நினைத்த ரஞ்சிதா இவர் செய்யும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு குடும்பத்தை ஓட்டினார். இந்நிலையில் ரகசியமாக வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வந்துள்ளார். அந்த பெண் பெங்களூருவில் வசிக்கின்றார். இதற்காக தன்னிடம் பணம் இல்லை என நினைத்த பிரசாந்த் பணத்திற்காக மாஸ்டர் பிளான் ஒன்றை தயார் செய்தார்.

ரஞ்சிதாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதை வைத்துக் கொண்டு உனக்கு கிட்னியில் கல் உள்ளது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதே போல மருத்துவமனைக்கு சென்று கிட்னியை விற்க ஒரு நபரை பார்த்துள்ளார். மனைவியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று ஆபரேஷன் செய்து கிட்னியை விற்றுள்ளார்.

பின்னர் அந்த பணத்தில் மற்றொரு பெண்ணுடன் ஜாலியாக இருந்துள்ளார். மீண்டும் பணம் தேவைப்பட்டுள்ளது மனைவியிடமே வந்துள்ளார். இதை எதையும் அறிந்திராத ரஞ்சிதா மீண்டும் வயிற்று வலி என மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்குதான் அவரது மற்றொரு கிட்னி காணாமல் போனது தெரியவந்தது.

இது தொடர்பாக கணவரிடம் கேட்டபோது அந்த கிட்னியை விற்று வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியதாக கூறியுள்ளார். ரஞ்சிதாவை தாக்கியும் அவமானப்படுத்தியும் பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரஞ்சிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Post

அரசுப் பள்ளியில் ஆபாச பாடம்..! ஆசிரியர் மீது மாணவிகள் பரபரப்பு புகார்..! அதிரடி நடவடிக்கை

Thu Sep 15 , 2022
அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆபாச பாடம் நடத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அந்த பள்ளியில் அக்கவுண்டன்சி பிரிவில் 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு அக்கவுண்டன்சி பாடம் நடத்தும் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் […]
கொடூரம்..!! சிறுவனின் கையில் டிரில் மெஷினால் ஓட்டை போட்ட சைக்கோ ஆசிரியர்..!! பரபர சம்பவம்

You May Like