fbpx

நாளை முதல் தமிழகத்தில் ஆவின் பால் கிடைக்காதா..? பால்வளத்துறை அமைச்சர் சொன்ன பதில் இதோ..

ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்குவதை நிறுத்தி பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நாளை முதல் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது…

தமிழகம் முழுவதும் உள்ள கால்நடை விவசாயிகளிடம் இருந்து தினமும் சுமார் 27 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.. சென்னையில் மட்டும் 14.5 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.. இந்த சூழலில் பால் கொள்முதல் விலையை 7 ரூபாய் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.. 36 மணி நேரத்திற்கு மட்டுமே ஆவின் பால் கையிருப்பில் உள்ளதால் நாளை முதல் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது..

இதுகுறித்து பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளிடம் பால்வளத்துறை அமைச்சர் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.. ஆனால் இந்த பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாததால், உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.. ஆவின் நிறுவனத்திற்கு இன்று முதல் பால் வழங்கப்போவதில்லை என்று அறிவித்துள்ள பால் உற்பத்தியாளர் சங்கத்தினர், இந்த போராட்டத்தால் தினமும் 5 லட்சம் லிட்டர் அளவுக்கு பால் கொள்முதல் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்..

இந்நிலையில் தமிழகத்தில் எங்கும் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு இல்லை என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ ஒரு சங்கத்தினர் மட்டுமே போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், அவர்களின் கோரிக்கை குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் “ மாநிலம் முழுவதும் சரியான முறையில் பால் கொள்முதல் செய்யப்படுகிறது, பால் விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது.. தமிழகத்தில் எங்கும் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு இல்லை.. ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் எதிர்க்கட்சியினர் பொய் பிரச்சாரத்தை தூண்டி வருகின்றனர்.. ” என்று தெரிவித்துள்ளார்..

Maha

Next Post

இன்றும் உயர்ந்த தங்கம் விலை.. 8 நாட்களில் ரூ.2,360 அதிகரிப்பு.. நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி..

Fri Mar 17 , 2023
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.43,600-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் […]
தங்கம்

You May Like