fbpx

‘நான் விற்கப்படுவேனா’?. ஐபிஎல் ஏலம் குறித்த ரிஷப் பந்தின் வைரல் பதிவு!

Rishabh Pant: ஐபிஎல் ஏலத்திற்கு சென்றால் நான் விற்கப்படுவேனா? என்ற ரிஷப் பந்தின் எக்ஸ் பதிவு வைரலாகியுள்ளது.

சொந்த மண்ணில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்பினார். இளம் இடது கை வீரரான இவர், டிசம்பர் 2022 இல் கார் விபத்தில் சிக்கினார். சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்த அவர், வங்க தேச டெஸ்ட் தொடரின்போது இந்திய அணையில் இணைந்தார்.

2024 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை வெல்வது மற்றும் விபத்திற்குப் பிறகு தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தது உள்ளிட்ட பந்த் பயணம் உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. இந்தநிலையில், ஐபிஎல் ஏலம் குறித்து ரிஷப் பந்தின் பதிவு தற்போது புயலை கிளப்பியுள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரிஷப் பந்த், நள்ளிரவில் தனது எக்ஸ் தளத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டார். பின்னர், 12:26 மணிக்கு திருத்தினார்.

அதில், ஐபிஎல் ஏலத்திற்கு சென்றால் நான் விற்கப்படுவேனா?. இல்லையா? எவ்வளவுக்கு விலைபோவேன் என்பது போன்ற பதிவை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, இந்த பதிவு உடனடியாக வைரலானது. ரிஷப் பந்தின் இந்த பதிவை கண்ட அவரது ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும், ரசிகர் ஒருவர் மதுபோதையில் இதுபோன்ற பதிவை வெளியிட்டுள்ளாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Readmore: ராணுவ வீரர்களின் உயிருக்கு ஆபத்து!. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் இந்தியாவை தொடர்ந்து இந்த நாடுகளும் கவலை!

English Summary

‘Will I be sold’?. Rishabh Pant’s viral post on IPL auction!

Kokila

Next Post

பீரங்கி பயிற்சி மையத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து 2 அக்னி வீரர்கள் உயிரிழப்பு...!

Sat Oct 12 , 2024
2 Agni soldiers killed in shelling at artillery training centre

You May Like