fbpx

சவால்களை கடந்து செல்லுமா?… சூரியனை ஆய்வுசெய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம்!… இன்று மாலை எல் 1 புள்ளியை சென்றடையும்!

சூரியனை ஆய்வுசெய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம், இன்று மாலை எல் 1 புள்ளியை சென்றடைகிறது.

சூரியனை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் ஆதித்யா எல் 1 திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது. இதற்காக கடந்த செப்.2ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து புவி வட்டபாதையில் 5 சுற்றுகளை முடித்த ஆதித்யா விண்கலம் பூமியை சுற்றி முடித்த பின் தன் இலக்கை நோக்கி பயணத்தை கடந்த செப்.19ம் தேதி தொடங்கியது.

இந்நிலையில் புவியில் இருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள சூரியனின் எல்-1 பகுதியை நோக்கிய தனது பயணத்தின் இறுதிகட்டத்தில் ஆதித்யா விண்கலம் உள்ளது. தற்போதைய சூழல்களின்படி எல்-1 சுற்றுப்பாதையில் விண்கலம் (ஜனவரி 6-ம் தேதி) இன்று மாலை 4 மணிக்கு செலுத்தப்பட உள்ளது. அதன்பின் ஆதித்யா விண்கலம் எல்-1 பகுதியை மையமாக கொண்ட சூரிய ஒளிவட்டப் பாதையில் (Halo Orbit) நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். எல் 1 புள்ளியை விண்கலம் சென்றடைவது சவாலான பணி என்பதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுற்றுவட்டப்பாதையில் சுற்றியபடி சூரியன் குறித்து ஆதித்யா ஆய்வு மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

சூப்பர் வாய்ப்பு...! பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு ரூ.21,000 வழங்கப்படும்...! இந்த பயிற்சி மட்டும் முடித்தால் போதும்...!

Sat Jan 6 , 2024
சேலம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பட்டயப் படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்சன் டெக்னாலஜி. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின […]

You May Like