fbpx

உடல் எடை, கெட்ட கொழுப்பை குறைக்கனுமா?… உப்பு போட்டு ‘டீ’ குடியுங்கள்!

தேநீரில் உப்பு சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க பரவலாக பயன்படுத்தப்படும் கிரீன் டீயுடன் கருப்பு உப்பைக் கலந்து குடியுங்கள். இதன் மூலம், உங்களுடைய செரிமான பண்புகளை அதிகரிக்கலாம். எடை குறைப்பு திட்டத்தை கடைபிடிப்பவர்களுக்கு உப்பு சேர்த்து குடிக்கும் கிரீன் டீ அஜீரணம், அமிலத்தன்மை ஆகிய பல வயிற்றுப் பிரச்சனைகளை குறைக்கும். எலுமிச்சை கலந்த தேநீரில் கருப்பு உப்பு சேர்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. நீங்கள் லெமன் டீயில் கருப்பு உப்பு கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். வயிற்றின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும். குடல் இயக்கத்தின் வேகம் துரிதப்படுத்துகிறது.

இதன் மூலம், எதைச் சாப்பிட்டாலும் வேகமாக ஜீரணிக்க செய்யும் ஆற்றல் குடலுக்கு கிடைக்கும். இதனால் வயிறு சுத்தமாகிறது. உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும். பால் சேர்க்காத பிளாக் டீயில் கருப்பு உப்பு கலந்து குடித்தால் ஆரோக்கியத்திற்கு உதவும். முக்கியமாக இது எடை இழப்பை துரிதப்படுத்தும். கருப்பு உப்பின் சிறப்பே, வயிற்றில் செரிமான நொதிகளை ஊக்குவிப்பது தான். இதனால் உணவு வேகமாக செரிமானம் ஆகும். கெட்ட கொழுப்பு குறையும். உடல் பருமனை குறைக்க உதவுகிறது.

Kokila

Next Post

2023 ஏப்ரல் மாதத்தில் ஆதார் e-kyc பரிவர்த்தனை எண்ணிக்கை அதிகரிப்பு...!

Wed May 24 , 2023
ஆதார் வைத்திருப்பவர்கள் 2023 ஏப்ரல் மாதத்தில் 1.96 பில்லியன் அங்கீகார பரிவர்த்தனைகளை மேற்கொண்டு உள்ளனர். இது 2022 ஏப்ரல் மாதத்தை விட 19.3 சதவீதம் அதிகம். இது இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் ஆதாரின் பயன்பாடு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை காட்டுகிறது. இந்த அங்கீகார பரிவர்த்தனை எண்களில் பெரும்பாலானவை கைரேகையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டன. இதற்கு அடுத்ததாக ஒரு முறை வழங்கும் கடவுச்சொற்கள், முக அங்கீகாரம் ஆகியவை உள்ளன.ஏப்ரல் மாதத்தில் மக்களின் […]
Gpay, PhonePe-க்கு சிக்கல்..!! இனி 30% தானாம்..!! அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி..!! யாருக்கு சாதகம்..?

You May Like