அமிதாப் பச்சன் – பிரபாஸ் இணைந்து நடிக்கும் புராஜெக்ட் கே படத்தில் வில்லனாக கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து மணிரத்னம், எச்.வினோத் ஆகியோரின் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் பாகுபலி பட நடிகரான பிரபாஸின் படத்தில் வில்லனாக கமல்ஹாசன் நடிக்கவிருப்பதாகவும் இதற்காக அவரிடம் ரூ.150 வரை சம்பளம் பேசியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.