அக்டோபர் 16-ம் தேதி மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தில் தகுதி பெற்றுள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்களில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்குக்கு ரூ.1,000 உரிமைத் தொகை செலுத்தப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 14-ம் தேதி பயனாளிகளின் வங்கி கணக்குகளில் ரூ.1,000 செலுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, இரண்டாவது மாதமான இன்று பயனாளிகளின் வங்கி கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட வேண்டும்.
ஆனால் இன்று உரிமைத் தொகை வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை வங்கிகள் விடுமுறை என்பதால் அக்டோபர் 16-ம் தேதியான திங்கட்கிழமை தான் பணம் வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.