தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வுகள் அடுத்த மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளதால், கோடை விடுமுறையில் மாற்றம் வருமா என மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலை முன்னிட்டு பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வுகள் வேகமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அடுத்த வாரத்துடன் தேர்வுகள் முடிவடைகிறது. 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு அட்டவணை மாற்றப்பட்டது. மேலும், 4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெறவிருந்த அறிவியல் தேர்வு ஏப்ரல் 22ஆம் தேதிக்கும், ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவிருந்த சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 23ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது.
தேர்வுக்கு இடையே உள்ள நாட்களில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் எனவும், ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் தேர்வு நடைபெறும் நாட்களுக்கு மட்டுமே பள்ளிக்கு வந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோடை விடுமுறையில் மாற்றம் இல்லை எனவும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : தனியார் பள்ளிகளில் இலவச கல்வி..!! விண்ணப்பிப்பது எப்படி..? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?