fbpx

காலை உணவுத் திட்டம் தனியார் வசம் ஒப்படைப்பா..? பதறியடித்து விளக்கம் கொடுத்த மாநகராட்சி..!! உண்மை என்ன..?

காலை உணவுத் திட்ட சர்ச்சைக்கு சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்திட்டத்தை ஓராண்டுக்கு தனியாருக்கு விட மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பலரிடம் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, இதற்கு விளக்கமளித்துள்ள சென்னை மாநகராட்சி, 65,030 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் 35 சமையல் கூடங்களில் இருந்து தரமாக காலை உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் உள்ள உயர் அலுவலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்புடன் இத்திட்டம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கும் நிலை ஏற்பட்டால், அதை தரமாக தயாரித்து வழங்க உத்தேச மதிப்பீடு தயாரித்து மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால், அதற்கான ஒப்பந்தப்புள்ளி ஏதும் தற்போது கோரப்படவில்லை. காலை உணவுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

"அவர் வீட்டில் இல்ல, வா ஜாலியா இருக்கலாம்."! ஏமாற்றிய மனைவி, கணவன் கொடுத்த கொடூர தண்டனை.! கள்ளக்காதலன் தப்பி ஓட்டம்.!

Fri Dec 1 , 2023
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் கணவரால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் ராஜா(36). இவர் வல்கனைசிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயா(30). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஜெயா அதே பகுதியைச் சேர்ந்த அசார் அலி(32) என்பவருடன் பழகி வந்ததாக தெரிகிறது. இவர்களது பழக்கம் […]

You May Like