தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலகலமாக கொண்டாடப்படும். சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வசிக்கும் மக்கள், சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். பொங்கல் பண்டிகையை பொறுத்தவரை பிற பண்டிகையை போல அல்லாமல் தொடர்ந்து விடுமுறை விடப்படும்.
இந்தாண்டு போகி பண்டிகை ஜனவரி 13ஆம் தேதி திங்கள் கிழமை வருகிறது. 14ஆம் தேதி (தை 1) பொங்கல், மறுநாள் திருவள்ளுவர் தினம், மாட்டுப்பொங்கல் (ஜனவரி 15), உழவர் திருநாள் (ஜனவரி 16) என 3 நாட்கள் அரசு விடுமுறை நாளாகும். ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை பணி நாளாகும். எனவே, 17ஆம் தேதி அரசு விடுமுறை அளித்தால் சொந்த ஊர்களுக்கு கொண்டாட சென்றவர்களுக்கு கூடுதல் விடுமுறை கிடைக்கும்.
அதாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான விடுமுறை என்பதால் கிட்டதட்ட ஒரு வாரத்திற்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியும். இதனால், ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூறுகையில், “ஜனவரி 11 – 19ஆம் தேதி வரை தொடர் விடுமுறை இருந்தால் பொங்கல் பண்டிகயை சிறப்பாக கொண்டாட முடியும். இது தொடர்பாக முறையான கோரிக்கையை ஜனவரி முதல் வாரத்தில் அரசிடம் வைக்கப்படும்” என்றனர்.