fbpx

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா..? ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் வெளியிட்ட அறிவிப்பு..!!

வங்கிகளுக்கான குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக தொடரும். 2023 பிப்ரவரி மாதம் முதலே ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றாமல் 6.5%ஆகவே இருந்து வருகிறது.

இந்தியப் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை 2024-25ஆம் நிதியாண்டின் 2-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.0%ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதே சமயம், இது 3 மற்றும் 4-வது காலாண்டில் 7.4% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2026ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம் 7.3%ஆக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் இருந்து வட்டி விகிதத்தில் நிவாரணம் வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்கிடையே, சில்லறை பணவீக்கம் இன்னும் கவலைக்குரியதாக உள்ளது. இது தவிர, மேற்கு ஆசிய நெருக்கடி மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது. இது கச்சா எண்ணெய் மற்றும் பொருட்களின் விலையை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

Read More : ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! இன்று ஒரு சவரன் விலை எவ்வளவு..?

English Summary

Reserve Bank Governor Shaktikanta Das has announced that there will be no change in the repo rate, the short-term lending rate for banks.

Chella

Next Post

ஒத்த துண்டு மட்டும்தான்!. மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இளம்பெண்கள்!. வைரல் வீடியோ!

Fri Dec 6 , 2024
Russia: ரஷ்யாவில் ஒற்றை துண்டை மட்டும் சுற்றிக்கொண்டு மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பெண்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஷ்யாவை சேர்ந்தவர் கேத் சும்ஸ்கயா. பிரபல மாடல் அழகியான இவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 30 லட்சம் பேர் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்தநிலையில் தோழிகள் 3 பேருடன் இணைந்து குளியல் அறையில் பயன்படுத்தும் துண்டு மட்டும் அணிந்தவாறு மெட்ரோ ரயிலில் பயணம் […]

You May Like