fbpx

உங்களுக்கு அரசு வேலை கிடைக்குமா..? ஜாதகத்தில் உங்க யோகம் எப்படி இருக்கு..? தெரிஞ்சிக்கோங்க..!!

நவகிரங்கள் ஒவ்வொன்றுக்கும் அதற்கான கடமை, தனித்துவமான செயல்பாடுகள் உள்ளன. அந்த வகையில், யாருக்கெல்லாம் அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும், அரசியலில் ஜொலிக்க வாய்ப்புகள் உண்டு, அரசு தொடர்பான யோகத்தை யார் பெறுவார்கள் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சூரியன்

சூரியன் மற்றும் சந்திரன் இரண்டு கிரகங்களும் நல்ல வலிமையாக அமைந்திருப்பின் அரசாங்க வேலை கிடைக்க சாதக பலன்கள் கிடைக்கும். நவகிரகங்களில் அரசன் சூரியன் தலைமைத் துவத்தை தரக்கூடியவர். அரசு தொடர்பான வேலையையும், குடும்ப தலைமைத்துவத்தை தரக்கூடியவராக இருப்பவர். சூரியன் பலம் பெற்றவரின் ஜாதகத்தில் அரசாங்கத்தில் தொழிலை ஆதரிக்கக்கூடியதாகவும், அதன் மூலம் பலன் பெறக் கூடியதாக இருக்கும்.

சந்திரன்

நவகிரகங்களில் சூரியன் மற்றும் சந்திரன் தந்தை, தாய் ஸ்தானத்தை குறிக்கின்றனர். பிறந்த ஜாதகத்தின் அடிப்படையில் சூரியனின் அமைப்பு அரசு வேலைக்கான யோகம் இருப்பின் அதை வேகமாக பெற்றுத் தரும். அதற்கான உந்துதலை சந்திரனின் சுபத்தன்மை கொடுப்பார். ஒருவருக்கு சுபமான, சக்தி வாய்ந்த சந்திரனின் அமைப்பு இருப்பின் அவருக்கு அரசாங்க வேலை தேடி வரும்.

சனி

சனி பகவான் ஜோதிடத்தில் கர்க காரகன் என அழைக்கப்படுகிறார். இவர் வெளிப்படையாக அரசாங்க வேலையை குறிக்காமல் இருக்கலாம். ஆனால், பூர்வீக பலன்கள் சாதகமாக, பலமாக இருப்பின் அவருக்கு சனியின் மூலம் அரசு வேலை அல்லது தனியார் வேலையில் மேலான பதவி கிடைக்கும். எந்த வேலை செய்பவராக இருந்தாலும் சனியின் சாதக அமைப்பு அல்லது பலம் குறைவாக இருப்பின் தொழிலில் முன்னேற்றம் அடைவது கடினமே.

செவ்வாய்

சூரிய பகவான் ஒரு செயலை செய்ய தூண்டுவார். செவ்வாய் பகவான் அந்த செயலை செய்து முடிக்கக்கூடி உத்வேகத்தையும், உந்துதலையும் தருவார். அந்த வகையில், ஜாதகத்தில் அரசாங்க வேலைகளில் ஒரு உந்துதலோடு செய்யக்கூடிய காவல்துறை அல்லது ராணுவம் போன்ற அரசு சேவை துறையில் செவ்வாயின் ஆதிக்கம் அதிகமாக இருக்கக் கூடியவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. செவ்வாய் உடல் வலிமை, ஆரோக்கியத்தியத்தை காக்க நினைக்கும் மன நிலை தரும்.

குரு

தேவர்களின் குரு, பிரகஸ்பதி குருபகவான் என அழைக்கப்படுகிறார். எப்போதும் நல்ல விஷயங்களை கற்றுத் தருவதோடு, சுப பலன்களை மட்டுமே கொடுக்கக் கூடியவர். சில நேரங்களில் தண்டனையையும் கொடுப்பார். குருவின் நல்லருளால், ஆசிரியர், கல்வித்துறை சார்ந்த அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அல்லது சமூகத்தை முன்னேற்றும் விஷயங்களில் ஈடுபாடு கொண்ட வேலைகளை கொடுப்பார். கல்வி தொடர்பான அரசாங்க வேலைகளை ஆதரிக்கும் கிரகங்களில் வியாழன் உள்ளது.

Chella

Next Post

Fastag மோசடிகள் எச்சரிக்கை!… ஜன.31க்குள் எல்லாத்தையும் செக் பண்ணுங்க!… என்ன செய்ய வேண்டும்?

Fri Jan 19 , 2024
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் வரி செலுத்த ஃபாஸ்டாக் (Fastag) பயன்படுத்தப்படுகிறது. இந்த மின்னணு கட்டண வசூல் முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) அமல்படுத்தியுள்ளது. ஃபாஸ்டாக் வசதியைப் பொருத்தவும் ரீசார்ஜ் செய்யவும் பல வசதிகள் உள்ளன. அதற்கான வசதி பல டிஜிட்டல் தளங்களில் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் பல நேரங்களில் மக்கள் மோசடிக்கு ஆளாகின்றனர். நமக்கே தெரியாமல் நம்முடைய கணக்கில் இருந்து பணத்தை […]

You May Like