fbpx

மீண்டும் விஜய்க்கு வில்லி..? ’தளபதி 69’ படத்தில் அதிரடியாக களமிறங்கும் பிரபல நடிகை..!! எகிறும் எதிர்பார்ப்பு..!!

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய், தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் அவருடைய 69-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்தப் படம்தான் விஜய்க்கு கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. எச்.வினோத்தை பொறுத்தவரை அவர் எடுக்கும் படங்கள் எதாவது ஒரு வகையில் அரசியல் பேசும் படங்களாகவே இருக்கும். துணிவு பட சமயத்தில் ‘விஜய்யை வைத்து படம் எடுக்கும் வாய்ப்பு வந்தால் அரசியல் படமாகத்தான் எடுப்பேன்’ என ஹெச்.வினோத் கூறியிருந்தார்.

இதனால், தற்போது அரசியலில் விஜய் குதித்துள்ளதால், விஜய் 69 படம் அரசியல் படமாக இருக்குமோ என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இப்படத்தில் சிவராஜ்குமார் நடிப்பதாக செய்தி வெளியானது. ஆனால், அவர் இந்தப் படத்தில் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. இதையடுத்து, இப்படத்திற்கு நடிக்க சத்யராஜிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிக்கர் முடியாது என சொல்லிவிட்டாராம்.

இந்நிலையில், நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், கடந்த 2012இல் வெளியான ‘போடா போடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தாரை தப்பட்டை, சண்டக்கோழி-2, சர்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள வரலட்சுமி தற்போது தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய் 69 படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கவிருக்கிறாராம். அவர் ஏற்கனவே விஜய்க்கு வில்லியாக சர்கார் படத்தில் நடித்து தூள் கிளப்பியிருப்பார். தற்போது மீண்டும் அவர்கள் காம்போவில் இன்னொரு படம் எனும் போது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

Read More : TNPSC குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம்..!! இன்றே கடைசி நாள்..!! தேர்வர்களே மறந்துறாதீங்க..!!

English Summary

Actress Varalaxmi Sarathkumar is reportedly set to star in Vijay 69. She has already created a stir by acting as Vijay’s villain in Sarkar.

Chella

Next Post

”இனி கேமரா வழியாக எதை பார்த்தாலும் கருத்து சொல்லும்”..!! சாட்ஜிபிடியில் இப்படி ஒரு அசத்தல் அப்டேட்டா..?

Thu Nov 21 , 2024
ChatGPT's Advanced Voice Mode could get vision capabilities soon

You May Like