fbpx

இரண்டு ஐ.டி. நிறுவனங்களில் வேலை … 300 பேரை அதிரடியாக வெளியேற்றியது விப்ரோ …

மிகப்பெரிய ஐ.டி.நிறுவனமான விப்ரோ 300 பணியாளர்களை வேலையில் இருந்து அதிரடியாக வெளியேற்றியுள்ளது.

விப்ரோவின் போட்டி நிறுவனங்களுடன் ஐடி பொறியாளர்கள் வேலை பார்ப்பதாக நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. கொரோனாவின்போது நிறைய ஐ.டி. நிறுவனங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் திட்டத்தை கொண்டு வந்தது. இதனால் அனைவருக்கும் பாதுகாப்பாக பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சிலர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இந்த நிறுவனத்திலும் வேலை பார்த்துக் கொண்டு சம்பளம் பெற்று வந்துள்ளனர். வேறொரு போட்டி நிறுவனத்திலும் வேலை பார்த்துக் கொண்டு சம்பளம் பெற்றுள்ளனர்.

இது குறித்து விப்ரோ மேலாளர்களுக்கு தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விப்ரோ தலைவர் ரிஷட் பிரேம்ஜி கூறுகையில் , ’’ நிறுவனத்தின் சட்டத்திற்கு மாறாக இரண்டு நிறுவனங்களில் ஒரே நேரத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இது பற்றி தகவல் கிடைத்தது. இது குறித்து சோதனை நடத்தப்பட்டது. அவர்கிள்ன விவரத்தை சேகரித்து வந்தோம். இந்நிலையில் 300 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.  ’’ என்றார். இதேபோல இன்னும் ஏராளமான பணியாளர்கள் கண்காணிப்பில் கொண்டு வந்துள்ளோம். விரைவில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

’’ விப்ரோவில் பணியாற்றிக் கொண்டு போட்டி நிறுவனம் எக்ஸ், ஒய், இசட் என எதில் வேலை பார்த்தாலும் அவர்கள் மீது இதே போலத்தான் நடவடிக்கை எடுக்கப்படும். இதே நிலைதான் அவர்களுக்கும் ’’ என்றார்..

Next Post

ஐ.சி.யுவில் போண்டா மணி …. நகைச்சுவை நடிகரின் பரிதாப நிலை …

Wed Sep 21 , 2022
நகைச்சுவை மூலமாக மக்களை சிரிக்க வைத்த நடிகர் போண்டாமணி , தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்து பரிதாப நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. சென்னையில் நகைச்சுவை நடிகர் போண்டா மணி ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து படத்தில் நடித்துக் கொண்டிருந்த அவர் சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது உதவிக்கு யாருமே இல்லை என அவர் கதறி அழுகின்றார். இது தொடர்பாக அவர் கூறுகையில் […]

You May Like