fbpx

’ஒரே நேரத்தில் பல பெண்களுடன்’..!! தற்கொலையின்போது கர்ப்பம்..? நடிகை துனிஷா வழக்கில் திடுக்கிடும் தகவல்..!!

டிவி நடிகை துனிஷாவுடன் தொடர்பில் இருக்கும்போதே காதலனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.

மும்பையில் 2 நாட்களுக்கு முன்பு டிவி நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டார். படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது மதிய உணவு இடைவெளியில் சக நடிகரும், காதலனுமான சீசம் மொகமத் கான் மேக்அப் அறையில் இருந்த வாஷ் ரூம்-ல் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் டிவி துறையில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போலீசாரின் விசாரணையில், துனிஷாவும், சீசன் மொகமத் கானும் காதலித்து வந்துள்ளனர். அவர்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் பிரேக் அப் செய்துள்ளனர். தற்கொலைக்கு தூண்டியதாக மொகமத் கான் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மொகமத் கானுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்திருக்கிறது.

’ஒரே நேரத்தில் பல பெண்களுடன்’..!! தற்கொலையின்போது கர்ப்பம்..? நடிகை துனிஷா வழக்கில் திடுக்கிடும் தகவல்..!!

அதனால் தான் துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டதாக துனிஷாவின் மாமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பவன் சர்மா கூறுகையில், ”துனிஷாவின் தற்கொலையால் குடும்ப உறுப்பினர்கள் ஆழ்ந்த அதிர்ச்சியில் இருக்கிறோம். துனிஷா உயிரோடு இல்லை என்பதை நம்ப முடியவில்லை. துனிஷா தனது தாயாருடன் வசித்து வந்தார். போலீஸார் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். துனிஷாவுடன் தொடர்பில் இருக்கும்போதே மொகமத் கான் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார். இதனால் துனிஷா மன அழுத்தத்திற்கு ஆளானார். டிசம்பர் 16ஆம் தேதி மொகமத் கான் தன்னை ஏமாற்றுவது துனிஷாவிற்கு தெரிய வந்தது. துனிஷாவின் தாயாரும் மொகமத் கானிடம் பேசினார். ஏன் நெருக்கமாக பழகிவிட்டு திடீரென விலகிச்செல்கிறாய் என்று கேட்டார்’ என்று தெரிவித்தார்.

’ஒரே நேரத்தில் பல பெண்களுடன்’..!! தற்கொலையின்போது கர்ப்பம்..? நடிகை துனிஷா வழக்கில் திடுக்கிடும் தகவல்..!!

துனிஷா தற்கொலை செய்த போது கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால், பிரேத பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இல்லை. அவரின் உடல் நாளை தான் தகனம் செய்யப்பட இருக்கிறது. போலீஸார் இத்தற்கொலை தொடர்பாக இதுவரை படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் உட்பட 14 பேரிடம் வாக்குமூலம் வாங்கி இருக்கின்றனர். மொகமத் கான் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 4 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் சந்திரகாந்த் ஜாதவ் கூறுகையில், தூக்கில் தொங்கியதால்தான் துனிஷா இறந்தார் என்பது பிரேத பரிசோதனையில் தெளிவாகி இருக்கிறது என்று தெரிவித்தார்.

Chella

Next Post

#கிருஷ்ணகிரி : காதலிப்பதாக கூறி 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த டிரைவர்..! 

Mon Dec 26 , 2022
கிருஷ்ணகிரி மாவட்டம் பென்சபள்ளி கிராமத்தில் வசிப்பவர் டிரைவர் சந்தோஷ். ஓசூர் காரப்பள்ளி பகுதியில் வசிக்கும் 17 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, கடந்த 6 மாதங்களாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி சந்தோஷ் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதையறிந்த சிறுமியின் பெற்றோர், ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். […]
மதுவுக்கு அடிமையாக்கி சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்? பிரபல அரசியல் கட்சி பிரமுகர் மகன் கைது..!

You May Like