உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு பின்னால் ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் பல இளைஞர்கள் தங்களுடைய கனவு நிறுவனத்தை AI துறையில் உருவாக்கி வரும் வேளையில், ஸ்டார்ட்அப் முதல் பெரிய நிறுவனங்கள் வரையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செலவுகளை குறைக்கும் முக்கிய கருவியாக பார்க்கப்படுகிறது. இதனாலேயே செயற்கை நுண்ணறிவு துறை ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூர்-ஐ தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் பல இடங்களில் ஈகாமர்ஸ் வர்த்தகம் செய்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனமான Dukaan, தனது வாடிக்கையாளர் சேவை பிரிவில் இருக்கும் 90 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
Dukaan நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவில் இருக்கும் ஊழியர்களின் பணியை ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் AI Chatbot சிறப்பாகவும், வேகமாகவும் இயங்கும் என்பதை நிறுவி அதில் வெற்றிக்கண்ட காரணத்தால் தற்போது இப்பிரிவில் இருக்கும் 90 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
Dukaan நிறுவனத்தின் முக்கிய இலக்கான லாபகரமாக இயங்க வேண்டும் என்பதை எட்ட AI Chatbot நிறுவி 90 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளோம் என இந்நிறுவன நிறுவனர் சிஇஓ சுமித் ஷா தெரிவித்துள்ளார். AI Chatbot நிறுவியதன் மூலம் Dukaan நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவின் செலவுகளை சுமார் 85 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது, இதோடு தீர்வு காணும் நேரம் 2 மணிநேரத்தில் இருந்து 3 நிமிடமாக குறைந்துள்ளது என Dukaan நிறுவன நிறுவனர் சிஇஓ சுமித் ஷா தெரிவித்துள்ளார். இது கடுமையான முடிவாக இருந்தாலும், முக்கிய தேவையாக உள்ளது. AI Chatbot நிறுவியதன் மூலம் 90 சதவீத ஊழியர்கள் சப்போர்ட் அணியில் இருந்து பணிநீக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் தற்போதைய பொருளாதாரத்திலும், வர்த்தக சூழ்நிலையிலும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அனைத்தும் யூனிகார்ன் என்னும் முக்கிய நிலையை அடைய லாபத்தை நோக்கி பயணித்துக்கொண்டு உள்ளனர். இதே நிலையில் தான் நாங்களும் என சுமித் ஷா விளக்கம் கொடுத்தார்.