fbpx

12 மணி நேர வேலை சட்டமசோதா வாபஸ்..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு..!!

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை எனும் தொழிலாளர் சட்டமசோதா நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த சட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மே தினப் பூங்காவில் உள்ள மே நினைவு சின்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தொழிலாளர்கள், தோழர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள். உயிரிழந்த தொழிலாளர்களுக்கு வீர வணக்கம். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் 1889ஆம் ஆண்டு கூடி மே 1 ஆம் தேதியை தொழிலாளர் வர்க்க உலக நாளாக அறிவித்தனர். சிந்தனை சிற்பி சிங்காரவேலர் தலைமையில் முதல் மே தினம் சென்னையில் கொண்டாடப்பட்டது. சோவியத் சென்று வந்த பிறகு பெரியாரும் மே தினத்தை கொண்டாட தொடங்கினார்.

1969 ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றதும் தொழிலாளர் நலத்துறையை உருவாக்கினார். மே 1 நாளை ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை நாளாக கருணாநிதி அறிவித்தார். தொழிலாளர்களின் குடும்பங்களை பாதுகாப்பதற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார். மே தினத்தையொட்டி நினைவுச் சின்னம் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததும் நிறைவேற்றுவோம் என அறிவித்தவர் கருணாநிதி. அரசாங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில் எல்லாருக்கும் எல்லாம் என்றபடி திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளில் 6 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் சர்ச்சைக்குரிய சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. பெருமுதலீடுகளை ஈர்க்க, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவே அந்த சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டது. அனைத்து தொழிற்சாலைகளுக்குமான சட்டமுன்வடிவு அல்ல. தொழிலாளர்களை பாதுகாக்கும் அம்சங்கள் பல இருந்தன. ஆனால். சில சந்தேகங்கள் தொழிற்சங்கங்களுக்கு இருந்தன. திமுக தொழிற்சங்கமும் எதிர்ப்பு தெரிவித்தது. உடனடியாக அனைத்து தொழிற்சங்க தோழர்களை கோட்டைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அதனை திரும்பப் பெற்றுள்ளது தான் திமுக அரசு. இதனை அவமானமாகக் கருதவில்லை. பெருமைப்படுகிறேன். திரும்ப பெறப்பட்டுள்ள செய்தி விரைவில் தெரிவிக்கப்படும்” என்று கூறினார்.

Chella

Next Post

'V' சென்டிமென்ட்டை விடாத அஜித்..!! AK62 படத்தின் டைட்டில் இதுதான்..!! ரசிகர்கள் குஷி..!!

Mon May 1 , 2023
அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 62-வது படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் அண்மையில் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஜன.11-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்தும் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் தனது 62-வது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. பின்னர், இப்படத்தில் இருந்து விக்னேஷ் […]
'V' சென்டிமென்ட்டை விடாத அஜித்..!! AK62 படத்தின் டைட்டில் இதுதான்..!! ரசிகர்கள் குஷி..!!

You May Like