ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய பொதுமக்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில் தொழிலதிபர்கள் தான் அதிகளவில் ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மே 19ம் தேதி ரூ. 2000 மதிப்புள்ள நோட்டுக்கள் மீண்டும் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. மேலும், செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கியின் மூலமாகவே ரூ. 2000 நோட்டுகளை டெபாசிட் அல்லது மாற்றம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ரூ2000 நோட்டுகளை மாற்றம் செய்வதற்கு பொதுமக்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படாது எனவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கட்டாயமாக மாற்றிக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சந்தையில் வெளியிடப்பட்ட மொத்த நோட்டுகளில் 87 சதவீதம் வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டன. சாமானியர்களை விட தொழிலதிபர்கள் தான் ரூ.2000 நோட்டுகளை அதிகமாக டெபாசிட் செய்து வருகிறார்கள் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், இப்போது வரை 88 சதவீத ரூ.2000 நோட்டுகள் வங்கிகளில் திரும்பப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், சாமானிய பொதுமக்களை காட்டிலும், தொழிலதிபர்கள்தான் அதிக அளவில் ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளதாகவும் அதன்படி, 40 சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகள் வணிகர்களிடமிருந்து டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.