fbpx

அடுத்த ஒரு வருடத்திற்குள்..!! முதுநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்..!! பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி முடிவு..!!

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் அடுத்த ஒரு வருடத்திற்குள் ஏற்பட இருக்கும் முதுநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் பட்டியலை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் அடுத்த ஒரு வருடத்திற்குள் ஏற்பட இருக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் விவரங்களை கணக்கெடுக்கப்பட உள்ளன.

இதையடுத்து, தங்கள் எல்லைக்குட்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள நேரடி நியமன காலிப் பணியிட விவரங்களை தயார் செய்ய வேண்டும். அதன்படி, கடந்த ஜூன் 1 முதல் 2024 மே 31ஆம் தேதி வரை ஓய்வு பெற இருக்கும் முதல்நிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்களின் விவரங்களை பணியிடம் வாரியாக தனித்தனியாக தயார் செய்து அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் எவ்வித தவறும் நடைபெறாதவாறு உரிய முறையில் அனைத்துப் பணிகளையும் செய்து முடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

உலக ஹாக்கி தரவரிசை பட்டியல்..!! இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா..?

Tue Sep 19 , 2023
உலக ஹாக்கி தரவரிசையில் இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சர்வதேச ஹாக்கி சம்மேளனம் வெளியிட்ட புள்ளிப் பட்டியலில், நெதர்லாந்து அணி முதலிடத்தையும், பெல்ஜியம் அணி இரண்டாம் இடத்தையும் தக்கவைத்துள்ளது. நான்காவது இடத்தில் இருந்து வந்த இந்தியா தற்போது 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதன்படி, நெதர்லாந்து (3113 புள்ளி) முதலிடத்திலும், பெல்ஜியம் (2989 புள்ளி) 2-வது இடத்திலும் இருக்கின்றன. இந்திய அணி ஒரு இடம் முன்னேறி (2771 புள்ளி) 3-வது இடத்தை […]

You May Like