சினிமாத் துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான தொல்லைகள் சமீப காலமாக வெளிப்படையாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் மலையாள சினிமாவில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளம் நடிகைகளில் தொடங்கி சீனியர் நடிகைகள் வரை பலரும் சினிமாவில் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசி பரபரப்பை கிளப்பின. இதில், பல முன்னணி நடிகர்களும் சிக்கின.
இந்நிலையில், இந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த வாரம் கோவாவில் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற விழாவில், திரைத்துறையில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து நடிகை குஷ்புவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “திரைத்துறையில் மட்டுமின்றி, அனைத்து இடங்களிலுமே பெண்கள் சவாலைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், யாரோ ஒருவர் தங்களைத் தவறாக நடத்துவதாக உணரும்போது, அதைப் பற்றி வெளிப்படையாக பேச முன்வர வேண்டும்.
நான் சினிமாவில் அறிமுகமான கால கட்டத்தில், படப்பிடிப்பின்போது ஒரு ஹீரோ என்னிடம் ‘யாருக்கும் தெரியாமல் எனக்கொரு வாய்ப்பு தருவீர்களா?’ என்று கேட்டார். நான் என் செருப்பை உயர்த்தி, ‘இங்கு வைத்து அறையவா? பட யூனிட் முன்பு அறையட்டுமா?’ என்று கேட்டேன். பிறகு என்னிடம் பேச அவருக்குத் தைரியமே வரவில்லை. நான் புதியவள் என அப்போது நினைக்கவில்லை. எல்லாவற்றையும் விட சுயமரியாதை முக்கியம். நீங்கள் உங்களை மதித்தால் தான், மற்றவர்களும் உங்களை மதிப்பார்கள்” என்று தெரிவித்தார்.
Read More : பிரிட்ஜின் சுவிட்சை ஆஃப் செய்யாமல் சுத்தம் செய்யாதீங்க..!! மின்சாரம் தாக்கி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!!