திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தீபாவப்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார் இவருக்கும் வசந்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர் இந்த நிலையில். கடந்த வருடம் இருவரும் மீண்டும் ஒன்றிணைந்து வாழ தொடங்கினார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான சசிகுமார் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது அதோடு வசந்தி கருவுற்ற நிலையில், சென்ற மாதம் அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்த நிலையில், குடிப்பழக்கம் காரணமாக வீட்டிற்கு சசிகுமார் பணம் கொடுக்காத நிலையில், எதிர்காலத்தில் பெண் குழந்தையை எப்படி காப்பாற்றப் போகிறோம்? என்று மனக்குழப்பத்தில் இருந்து வந்த வசந்தி, தன்னுடைய குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டு வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் போட்டுவிட்டு கை தவறி விழுந்து விட்டதாக நாடகம் ஆடி இருக்கிறார்.
இந்த நிலையில் தான் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் வசதியிடம் விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினரிடமும் குழந்தை கை தவறி தண்ணீரில் விழுந்து விட்டதாக தெரிவித்த வசந்தி, பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து வசந்தியின் கணவர் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் தளி காவல்துறையினர் குழந்தையின் சம்மதத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்