fbpx

போராடி கணவரை ஜாமினில் அழைத்து வந்த மனைவி…..! வெளியே வந்த 15 நாட்களில் மனைவிக்கு ஏற்பட்ட கொடூரம்…..!

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியின் மேற்கு பகுதியில் வசித்து வந்த பூஜா மற்றும் கிருஷ்ண பால் என்ற இருவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு தங்களுடைய குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டனர். அதோடு பூஜா ஒரு பியூட்டி பார்லரை நடத்தி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் தான் கிருஷ்ணபால் ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அவர் சமீபத்தில் தான் ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில், பூஜா தன்னுடைய கணவரை கடந்த 15 நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் அழைத்து வந்துள்ளார். வெளியே வந்த கணவர் தன்னுடைய மனைவி பூஜாவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது.

பூஜாவின் கணவர் கிருஷ்ணபால் பலமுறை துப்பாக்கியால் சுட்டதில் அவருடைய மனைவி பூஜா படுகாயம் அடைந்து உயிரிழந்தார். அவருடன் இருந்த பூஜாவின் தோழி முன்னாவும், துப்பாக்கிச் சூட்டில் காயமற்றார் பூஜாவின் உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கிருஷ்ண பாலை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது தன்னுடைய மனைவி தன்னை ஏமாற்றியதாக சந்தேகப்பட்டதாகவும், அதனால்தான் மனைவி பூஜாவை சுட்டு கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் சாக வேண்டியவர்தான் .அதன் காரணமாக தான் நான் அவரைக் கொன்றேன். எனக்கு இதில் எந்த வருத்தமும் இல்லை என்று கிருஷ்ணபால் காவல்துறையினரிடம் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் இது குறித்து பூஜாவின் தாய் ஷீலாதேவி தெரிவித்ததாவது, கிருஷ்ணபால் குடிகாரனாக இருந்தார் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து என்னுடைய மகளை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார் என்றும், கடந்த சனிக்கிழமை குடிபோதையில் வீட்டிற்கு வந்த அவர் சிறு வயது மகன்கள் முன்னிலையில் பூஜாவை சரமாரியாக தாக்கினார் எனவும், கோபத்தில் ஒரு நாட்டுத் துப்பாக்கியை எடுத்து சுட முயற்சித்தபோது, பூஜா வீதி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி ஓடிவிட்டார் என்றும் அவர் அவளை துரத்தி சென்று சுட்டு கொலை செய்தார் என்றும் கூறியுள்ளார்.

Next Post

வீடு வாங்க, வாடகைக்கு சிறந்த நகரம் மும்பை..!! ஆய்வில் முடிவில் வெளிவந்த தகவல்..!!

Tue Jun 13 , 2023
இந்தியாவிலேயே மும்பை தான் வீடு வாங்க அல்லது வாடகைக்கு மிகவும் விலை உயர்ந்த நகரம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அர்பன் லேண்ட் இன்ஸ்டிட்யூட் (யுஎல்ஐ) சமீபத்திய அறிக்கையின்படி, தனியார் வீடுகளை வாடகைக்கு எடுப்பதற்கும், வாங்குவதற்கும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிகவும் விலையுயர்ந்த நகரமாக ஹாங்காங்கை சிங்கப்பூர் முந்தியுள்ளது. 2022ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தனியார் வீடுகளின் சராசரி விலை $1.2 மில்லியனை எட்டியது, ஹாங்காங்கின் சராசரி விலையான $1.16 மில்லியனைத் தாண்டியது. ULI […]

You May Like