உயிரோடு புதைக்கப்பட்ட பெண், தனது கையில் இருந்த ஆப்பிள் வாட்ச் மூலம் மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.
டிஜிட்டல் யுகத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகள் உலகளவில் அறிமுகமாகி வருகிறது. அந்த வகையில், மெசேஜ்கள், நோட்டிபிகேஷன், தொலைபேசி அழைப்புகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஸ்மார்ட்வாட்ச் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அதேநேரம் ஸ்மார்ட்வாட்ச் தற்போது ஒரு பெண்ணின் உயிரையும் காப்பாற்றியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டனில் வசிக்கும் 42 வயதான யங் சூக் அன் என்ற பெண், தனது கணவரோடு சண்டையிட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த அவரது கணவர் அந்த பெண்ணை கத்தியால் குத்தியதில் மயக்கமடைந்துள்ளார். இந்நிலையில், பதறிப்போன கணவன், மனைவியை குழிதோண்டி புதைத்துள்ளார். அப்போது, அந்த பெண் கையில் கட்டிருந்த ஆப்பிள் வாட்ச் மூலம் அவசர எண்ணிற்கு கால் செய்து தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். ஆனால், அதற்குள்ளாகவே, அந்த பெண் தானாகவே குழியிலிருந்து போராடி வெளியில் வந்துள்ளார்.

மேலும், படுகாயமடைந்த நிலையில் அந்த பெண்ணை மீட்ட போலீசார், அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அந்த வாட்சை அந்த பெண்ணின் கணவர் சம்மட்டியால் அடித்தும் அது உடையாமல் தக்க நேரத்தில் அந்த பெண்ணின் உயிரை காத்துள்ளதாக தகவல் தெரிகிறது.