fbpx

இ-சேவை மையத்தில் உயிருடன் எரிக்கப்பட்ட பெண்..!! கணவன் வெறிச்செயல்..!! நடந்தது என்ன..?

கேரள மாநிலம் கொல்லம் அருகே பாரிப்பள்ளி நாவாயிக்குளம் பகுதியில் வசித்து வருபவர் ரஹீம் (50). இவருடைய மனைவி நாதிரா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நாதிரா பாரிப்பள்ளியில் உள்ள ஒரு இ-சேவை மையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே நாதிராவின் நடத்தையில் ரஹீமுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று நாதிரா வழக்கம் போல் இ-சேவை மையத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். அங்கு அவர் பணியில் இருந்த போது ரஹீம் திடீரென பெட்ரோல் கேனுடன் நுழைந்தார். நாதிரா திரும்பி பார்ப்பதற்குள் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இ-சேவை மையத்தில் அவருடன் இருந்த சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தீயின் உக்கிரம் தாளாமல் நாதிரா அலறி துடித்தார். சக ஊழியர்கள் காப்பாற்ற முயற்சித்தும் சிறிது நேரத்தில் நாதிரா உடல் கருகி அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவியை கொன்றதும் அங்கிருந்து தப்பி ஓடிய ரஹீம் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதற்கிடையே கணவர் ரஹீம், ஆகஸ்ட் மாதம் மனைவியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இந்த வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அவர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், ஆத்திரத்தில் மனைவியை எரித்து கொலை தானும் தற்கொலை செய்து கொண்டார்.

Chella

Next Post

#சற்றுமுன்: யூடியூபர் டிடிஎஃப் வாசனை கைது செய்தது காவல்துறை...!

Tue Sep 19 , 2023
யூடியூபர் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர். பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், சாலை விதிகளை மீறியதாகக் கூறி தமிழக காவல்துறையால் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். இருந்த போதிலும் தொடர்ந்து சாலை விதிகளை மீறிய அவர், நேற்று விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பைக் சவாரி செய்து சாகசம் செய்தனர். அப்போது காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் பகுதியில் பைக்கில் சென்றபோது […]
’வழக்கு எல்லாம் எனக்கு துணி கடையில் கட்டைப்பை வாங்கி வருவது போல’..!! காவல்துறையை வம்பிழுத்த டிடிஎஃப்..!!

You May Like