fbpx

திண்டுக்கல் | வேடசந்தூர் அருகே…..! நெடுஞ்சாலையில் சிதைந்த நிலையில் கிடந்த பெண்ணின் உடல் காவல்துறையினர் தீவிர விசாரணை…..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இருக்கின்ற தம்மனம்பட்டி 4️ வழி சாலையில் நள்ளிரவில் பெண்ணின் உடல் மீது அடுத்தடுத்து வாகனங்கள் ஏறி சென்றதால் சிதைந்த நிலையில், அந்த உடல் கடப்பதாக ரோந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் வேடசந்தூர் காவல்துறையினருடன் பெண்ணின் உடல் கிடந்த பகுதிக்கு உடனடியாக சென்றனர். அந்த பெண்ணின் சேலை ஜாக்கெட் உள்ளிட்டவை மட்டுமே அடையாளமாக காணப்பட்டது. உடல் முழுவதும் இரவில் அடுத்தடுத்து வாகனங்கள் கடந்து சென்றதால் முற்றிலுமாக சிதைந்த நிலையில் இருந்தது.

அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த பெண் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? அதிகாலை ஒரு மணிக்கு அந்த இடத்திற்கு எதற்காக வந்தார்?, விபத்தில் உயிரிழந்தாரா?, அல்லது யாராவது கொலை செய்து சாலையில் போட்டுவிட்டு சென்றுவிட்டார்களா? என வேடசந்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

தமிழகத்தின் அடுத்த காவல்துறை இயக்குனர் யார்……? இன்று முடிவு…..! அவசரமாக டெல்லிக்கு பறந்த அதிகாரிகள்…..!

Thu Jun 22 , 2023
தற்போதைய தமிழக காவல்துறையின் இயக்குனராக இருக்கின்ற டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30ம் தேதி உடன் பணி ஓய்வு பெறுகிறார். இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு உடனடியாக புதிய காவல்துறை இயக்குநரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே இந்த காவல்துறை தலைமை இயக்குனர் பதவியின் போட்டியில் தற்போதைய சென்னை மாநகர டிஜிபி சங்கர் ஜிவால் இருக்கிறார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதேநேரம் அவர் சென்னை […]

You May Like