fbpx

பெற்ற குழந்தையை காப்பாற்ற புலியிடம் போராடிய தாய்…. வெறும் கைகளால் புலியை தாக்கி விரட்டினார்…

பெற்றகுழந்தைக்கு ஏதாவது ஒன்று என்றால் எந்த தாயும் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டாள். தன் உயிரைக்கொடுத்தாவது காப்பாற்றிவிட எண்ணிய இந்த தாய் புலியிடமே சண்டை போட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபல்பூரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அர்ச்சனா சௌத்ரி என்பது அவர் பெயர் . தனது குழந்தையுடன் பந்தவ்கர் புலிகள் காப்பகம் அருகே ரோஹானியா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. இது வனப்பகுதியை ஒட்டிய ஒரு கிராமப்புற பகுதி . தனது குழந்தையுடன் வீட்டுக்கு அருகே உள்ள தோட்டத்திற்கு  சென்றுள்ளார். குழந்தையை இயற்கை உபாதை கழிக்க விட்டுவிட்டு அவர் அங்கே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த புலி  குழந்தைய பார்த்தவுடன்   தாக்க வந்தது. அதே நேரத்தில் குழந்தையை தாக்க வந்த புலியை அர்ச்சனா கவனித்துவிட்டார். குழந்தையை தூக்க ஓடிச் சென்றபோது புலி தாக்க வந்தது. குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் புலியை வெறும் கையால் தாக்கியுள்ளார். இதனிடையே குழந்தையையும் புலி தாக்கிவிட்டது. தனது வலு முழுக்க பயன்படுத்தி புலியை நேரெதிரே எதிர்கொண்டார் அந்தப் பெண் . அப்போது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்த்தினர் அந்தஇடத்திற்கு வந்துள்ளனர். உடனடியாக அனைவரும் சேர்ந்து புலியை விரட்டியடித்தனர்.

குழந்தையை காப்பாற்ற தைரியத்துடன் செயல்பட்ட அந்த பெண்ணை வனத்துறை அதிகாரிகள் பாராட்டினர். குழந்தைக்கும் , பெண்ணுக்கும் காயம் ஏற்பட்டதை அடுத்துஅவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் படு காயங்களுடன் இருந்தார்கள் எனவும் தற்போது சிகிச்சைக்கு பின்னர் நலமுடன் உள்ளார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் . ’’ புலி அப்பகுதியில் சுற்றித்திரிவதாக நாங்கள் ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. அவர் அந்த அறிவிப்பை அறிந்திருக்கவில்லை என நினைக்கின்றேன். குழந்தையை காப்பாற்ற வெறித்தனமாக புலியிடம் சண்டை போட்ட பெண்ணுக்கு வாழ்த்துக்கள் . ’’ என்றார்.

Next Post

தமிழ்நாடு இளைஞருக்கு தென் கொரிய பெண் மீது காதல் …இந்துமுறைப்படி திருமணம் செய்துகொண்ட ஜோடி

Wed Sep 7 , 2022
தென் கொரிய பெண் மீது காதல் கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் இந்து முறைப்படி தனது சொந்த ஊரான திருப்பத்தூரிலேயே திருமணம் செய்து கொண்டார். திருப்பத்தூர் அருகே வாணியம்பாடியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (33) வெள்ளக்குட்ட என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர் கோவையில் தனியார் ஏரோனாடிகல் எஞ்சினியர் படிப்பை படித்து முடித்தார். பின்னர் தென் கொரியாவில் மேற்படிப்பிற்காக சென்றார். அங்கு பி.எச்.டி. படிப்பை முடித்த அவர் தென்கொரியாவிலேயே வேலை கிடைத்து […]

You May Like