விக்டோரியா என்ற பெண், ரஷ்யாவில் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு முறை சைபீரியா காட்டுப் பகுதிக்கு சென்ற போது, அங்கு தனியாக கைவிடப்பட்ட பூனை குட்டி ஒன்றை பார்த்துள்ளார். அந்த குட்டியை காட்டுக்குள் தனியாக விட்டு செல்ல மனம் இல்லாத விக்டோரியா, அந்த குட்டியை தன்னோடு எடுத்து செல்ல நினைத்துள்ளார். அதன் படி, அவர் அந்த அழகிய கருப்பு நிற குட்டி பூனையை தன்னோடு வீட்டிற்க்கு எடுத்து சென்றுள்ளார். ஆனால் குட்டி பூனையை தன்னோடு வீட்டிற்க்கு எடுத்து செல்லும் போது, விக்டோரியாக்கு அது பூனை குட்டி அல்ல, சைபீரியன் ஜூவில் பிறந்த லூனா என்ற பெயருடைய கருஞ்சிறுத்தை குட்டி என்று தெரியாது.
நாட்கள் செல்ல செல்ல, குட்டி பூனை என்று நினைத்த லூனாவின் உண்மையான சுயரூபம் தெரியவந்துள்ளது. லூனா மீது விக்டோரியா வைத்திருந்த அதிக பாசத்தால் லூனா பூனை இல்லை, கருஞ்சிறுத்தை என்று தெரிந்தும் அதைவிட்டு பிரியாமல் இருந்துள்ளார். மேலும், டிக் டாக்கில் @Luna_the_pantera என்ற பெயரில் கணக்கை தொடங்கி, கருஞ்சிறுத்தை குட்டியின் அன்றாட செயல்பாடுகளை பதிவிட்டு வந்துள்ளார். இதனால், லூனாவிர்க்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர். சிறு வயதில் இருந்து, லூனா வீட்டிலேயே வளர்ந்ததால், மற்ற சிறுத்தைகள் போல் இல்லாமல் மிகவும் சாந்தமான விலங்காக தற்போது வரை உள்ளது.