6 மாதங்களில் 25 கிலோ எடையை பெண் ஒருவர் குறைத்துள்ள நிலையில், அவரின் டயட் பிளான் குறித்த விவரத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அவசர மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறையால், உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதில் முக்கியமானவை தான் உடல் பருமன். இதனால், பலரும் சிரமத்தை சந்திக்கின்றனர். உடல் எடையை குறைக்க பலரும் பல விஷயங்களை செய்து வருகின்றனர். அதிலும், ஆரோக்கியமான எடை இழப்பு என்பது ஒரு சிறந்த உடல் எடையை அடைவது மட்டுமின்றி, உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குகிறது.
அந்த வகையில், யோகா பயிற்சியாளரான சாக்ஷி யாதவ் என்ற பெண், தனது உடல் எடையை 6 மாதங்களில் 80 கிலோவில் இருந்து 55 கிலோவுக்கு கொண்டு வந்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில், ”இரண்டு மூன்று ஆண்டுகளாகவே அதிகப்படியான ஜங்க் ஃபுட்களை சாப்பிட்டதால், எனது உடல் எடை அதிகரித்து, கடுமையான வயிற்று தொற்று ஏற்பட்டதாக கூறியுள்ளார். மேலும், இன்ஸ்டா பக்கத்தில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட சாக்ஷி, தவிர்க்க வேண்டிய உணவுகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் எடை இழப்புக்கான உணவுத் திட்டம் பற்றி விரிவாக கூறியுள்ளார்.
தவிர்க்க வேண்டிய 6 உணவுகள் : ஜங்க் ஃபுட், பொரித்த உணவுகள், எண்ணெய், பதப்படுத்தப்பட்ட உணவு, அதிகப்படியான சர்க்கரை, அதிகப்படியான உணவை தவிர்க்க வேண்டும்.
பின்பற்ற வேண்டிய 5 குறிப்புகள் : தினமும் 10,000 அடிகள் நடக்க வேண்டும். 45 முதல் 60 நிமிடங்கள் வரை உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இரவும் 6 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். ஒருநாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.
* காலையில் வெதுவெதுப்பான நீர், பயிறு வகைகள் சாப்பிடலாம்.
* நண்பகலில் பழங்கள், மதிய உணவிற்கு இரண்டு ரொட்டிகள், சாலட், தயிர் மற்றும் சன்னா சாப்பிடலாம்.
* இரவு உணவாக ஒரு கிண்ணம் பருப்பு மற்றும் அரை கிண்ணம் சாதம் சாப்பிடலாம்.