fbpx

ஓரினச் சேர்க்கையால் விபரீதம்.! ‘8’ வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.! காதலியுடன் சேர்ந்து மகனைக் கொன்ற தாய்.!

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வழக்கில் சிறுவனின் தாய் மற்றும் இன்னொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் கடந்த 16ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டான். இந்த சிறுவனின் மரணம் தொடர்ந்து மர்மமாக இருந்து வந்த நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக உண்மையான குற்றவாளிகளை காவல்துறை கைது செய்துள்ளது. போலீசாரின் விசாரணையில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சாந்தா சர்மா என்ற பெண்ணுக்கு ஸ்ரேயாஸ் என்ற 8 வயது மகன் இருந்தான். சாந்தா சர்மா ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு கொண்டவர் என தெரிகிறது. இவர் தனது தோழியான இஸ்ரத் பர்வீன் என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்திருக்கிறார். வீட்டில் தனிமையில் இருக்கும் போது சாந்தா சர்மா தனது தோழியான பர்வீனுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இதேபோன்று சம்பவம் நடந்த தினத்தன்று சாந்தா சர்மா பர்வீனுடன் உல்லாசமாக இருந்திருக்கிறார். எதிர்பாராத விதமாக வீட்டிற்கு வந்து அவரது மகன் இதனை பார்த்து விட்டார். இதனால் தனது தவறான உறவு பற்றி வீட்டில் உள்ளவர்களிடம் மகன் கூறி விடுவான் என்ற பயத்தில் சாந்தா சர்மா மற்றும் அவரது காதலி பர்வீன் ஆகியோர் சேர்ந்து சிறுவனை கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

English Summary: A woman from west Bengal killer her 8-year-old son with the help of her partner for seeing their intimate moments.

Next Post

Vanitha Vijaykumar | திருமணத்திற்கு அழைக்காததால் ஆத்திரம்..!! தங்கை குறித்து வனிதா விஜயகுமார் சொன்ன பகீர் தகவல்..!!

Wed Feb 21 , 2024
தனது சகோதரி மகளின் திருமண விழாவிற்கு தன்னை அழைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருக்கும் நடிகை வனிதா விஜயகுமார், தற்போது தனது சகோதரி ஸ்ரீதேவி குறித்து பேசியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. Vanitha Vijaykumar | தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் முக்கியமானவர் விஜயகுமார். இவரின் மகன் அருண் விஜய், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்கிறார். விஜயகுமாரின் மூத்த மகள் அனிதா. இவர், சரத்குமார் நடித்த கூலி […]

You May Like