மும்பையில் பர்தா அணிய மறுத்த மனைவியை கணவனே கத்தியால் குத்திக் கொன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
மும்பையில் டாக்சி ஓட்டுனர் இக்பால் (36). இவர் ரூபாலி (20) என்ற இந்து பெண்ணை 2019ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது பெயரை சாரா என மாற்றியுள்ளார்.கடந்த 202ம் ஆண்டு இருவருக்கும் ஆண்குழந்தை பிறந்தது. இருவேறு மதத்தவர் திருமணம் செய்தது குடும்பத்தில் யாருக்கும் பிடிக்கவில்லை. இதனால் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் கடைபிடித்து வரும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் ரூபாலி கணவரை பிரிந்து தனியாக சென்று விட்டார். குழந்தையும் ரூபாலியும் தனியாக வாழ்ந்த்து வந்துள்ளனர. இந்நிலையில் கடந்த 26ம் தேதி விவாகரத்து மற்றும்குழந்தை யாரிடம் வளர வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்க ரூபாலியை இக்பால் சந்தித்தார்.
அப்போது இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை முற்றிய சண்டை பூதாகரமாக வெடித்தது. ஆத்திரமடைந்த இக்பால் ரூபாலியை இழுத்துச் சென்ற கத்தியால் பல முறை குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இக்பாலை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.