கார்னிரோ சோப்ரேரா கோஜ் என்ற பெண் ஒருவர் பிரேசிலில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெஸ்டோ சாஸ் என்ற சட்னியை சந்தையில் இருந்து வாங்கியுள்ளார். அந்த சட்னி பூண்டு, ஐரோப்பிய பைன் பருப்புகள், உப்பு, துளசி மற்றும் சீஸ் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. சுவையாயான இந்த சட்னியை சிலர் ஆட்டுப்பால் மற்றும் ஆலிவ் எண்ணெயையும் சேர்த்து செய்கின்றனர். இந்நிலையில், அவர் வாங்கிய பாட்டிலில் காலாவதி தேதி இல்லை.
இந்நிலையில், ஒரு சில நாட்களில் அவர் வாங்கிய சட்னியை சாப்பிட்டுள்ளார். அந்த சட்னியை சாப்பிட்ட ஒரு சில மணி நேரங்களில் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து, 20 கிலோமீட்டர் அவரே வண்டியை ஓட்டி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் ஒரு சில நிமிடங்களில், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, கை கால்களை அசைக்க முடியாமல் போயுள்ளது.
இதையடுத்து, மருத்துவர்கள் அவரை ஸ்கேன் செய்ததில் அவரது உடலின் பல பாகங்கள் வேலை செய்யாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவருக்கு போட்யூலிசம் என்ற அரிய தொற்று இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். உணவு விஷத்தால் ஏற்படும் இந்த தொற்று, நரம்புகளைத் தாக்கி, சுவாசிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இந்த தொற்று, தசைகள் தளர்வடைய செய்வதுடன் பக்கவாதத்தையும் சில நேரங்களில் மரணத்தையும் ஏற்படுத்துகிறது. இந்நிலையில், மருத்துவர்கள் அவருக்கு மருந்து கொடுத்ததையடுத்து அவரால் பேச முடிந்தது. தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.