fbpx

“நம்ம எல்லாரும் சேர்ந்து என் மனைவியோட…” குழந்தைக்காக கணவர் செய்த அசிங்கமான செயல்..

உத்திரபிரதேசம் மாநிலம், லக்னோ பிலிபிட் மாவட்டத்தை சேர்ந்தவர் 37 வயதான பெண் தீபிகா( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் முடிந்துள்ளது. இத்தனை வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் தீபிகாவிற்கு உடல் ரீதியாக பிரச்சனை ஏதும் உள்ளதா என்று பரிசோதனை செய்தனர். ஆனால், தீபிகா குழந்தை பெறும் உடற் தகுதியோடு இருப்பதும், அவரது கணவருக்கு தான் உடல் ரீதியான பிரச்சனை இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனால் தனக்கு வாரிசு வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த தீபிகாவின் கணவர், தன்னுடன் பிறந்த 3 சகோதரர்களுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என அவரது மனைவியை கட்டாயப்படுத்தியுள்ளார். அப்படி உறவு வைக்க மறுத்தால், ரூ.5 இலட்சம் ரொக்கம், கார் வரதட்சணையாக பெற்றோரிடம் பெற்று வருமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு தீபிகா மறுப்பு தெரிவித்ததால், அவரை வீட்டில் அடைத்து வைத்து குடும்பமாக கொடுமை செய்துள்ளனர். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தீபிகாவை அவரது கணவர் மற்றும் அவரது சகோதரார்கள் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, தீபிகா தற்போது காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் அளித்துள்ளார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தீபிகாவின் கணவர், அவரது பெற்றோர் மற்றும் மூன்று சகோதரர்களை கைது செய்துள்ளனர்.

Maha

Next Post

மக்களே உஷார்!!! காலாவதியான சட்னியை சாப்பிட்ட பெண்ணிற்கு நேர்ந்த சோகம்..

Sun Oct 1 , 2023
கார்னிரோ சோப்ரேரா கோஜ் என்ற பெண் ஒருவர் பிரேசிலில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெஸ்டோ சாஸ் என்ற சட்னியை சந்தையில் இருந்து வாங்கியுள்ளார். அந்த சட்னி பூண்டு, ஐரோப்பிய பைன் பருப்புகள், உப்பு, துளசி மற்றும் சீஸ் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. சுவையாயான இந்த சட்னியை சிலர் ஆட்டுப்பால் மற்றும் ஆலிவ் எண்ணெயையும் சேர்த்து செய்கின்றனர். இந்நிலையில், அவர் வாங்கிய பாட்டிலில் காலாவதி தேதி இல்லை. […]

You May Like