fbpx

சரசரவென குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.224 குறைந்ததால் பெண்கள் மகிழ்ச்சி…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.244 குறைந்து ரூ.37,920-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது… சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.28 குறைந்து ரூ.4740-க்கு விற்பனையாகிறது.. இதனால் தங்கம் விலை ரூ.244 குறைந்து ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஆனால் வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி விலை 10 காசு உயர்ந்து ரூ.60.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.60,400-க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

இனி உணவகங்களின் மெனு கார்டில் இந்த தகவல்கள் கட்டாயம்.. FSSAI அறிவிப்பு..

Sat Sep 10 , 2022
இனி உணவகங்களின் மெனு கார்டில் கலோரி குறித்த தகவல்கள் கட்டாயம் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.. பெரிய மற்றும் சிறிய அளவிலான உணவகங்கள் தங்களது மெனு கார்டில் இடம்பெற்றுள்ள உணவு வகைகளுடன் அவற்றின் கலோரியையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 நவம்பர் மாதம் இந்த அறிவிப்பை FSSAI வெளியிட்டது. இதனை நடைமுறைக்கு கொண்டு வர உணவக நிறுவனங்களுக்கு ஜனவரி 1, […]

You May Like