fbpx

நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிக்கலாம்!… நீதிமன்றத்தின் வினோத தீர்ப்பு!… எந்த நாட்டில் தெரியுமா?

நீச்சல் குளங்களில் மேலாடையின்றி குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் ஜெர்மனியின் பெர்லின் நகர நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் 33 வயது பெண் ஒருவர் பெரிலின் நகரில் உள்ள பொது நீச்சல் குளம் ஒன்றில் தனது திறந்த மார்பகங்களை காட்டியவாறு சூரிய குளியலில் ஈடுபட்டார். தனது மார்பகங்களை மறைக்குமாறு அங்கிருந்தவர்கள் அவரை பணித்ததால் அவர் நீச்சல் குளத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார். தனக்கு நேர்ந்த இந்த சம்பவம் தொடர்பாக பாகுபாடு எதிர்ப்பு சட்டத்தை மேற்கொள் காட்டி புகார் அளித்தார். இந்த வழக்கு ஜெர்மனி முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது.
பொதுவாக நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடைகள் இன்றி குளிப்பதை இல்லை என்றாலும் கடந்த ஆண்டு கோடை காலத்தில் பெண்கள் மேலாடைகள் இன்றி குளிப்பதை லோயர் சாக்சனியில் உள்ள கோட்டிங்கன் மற்றும் நார்த் ரைன், வெஸ்ட்பாலியாவில் உள்ள சீகன் ஆகிய இடங்களில் அனுமதித்துள்ளதாகவும் மேற்கொள்கள் காட்டப்பட்டது.

இந்த நிலையில் பாலின பாகுப்பாட்டை களையும் வகையில் பெர்லின் நகரில் உள்ள அனைத்து பொதுநீச்சல் குளங்களிலும் குளிக்க வரும் அனைத்து பாலினத்தை சேர்ந்தவர்களும் மேலாடைகள் இன்றி குளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளாட்சி நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு அப்பகுதியை சேர்ந்தவர்களில் ஒரு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய பெர்லின் நீதிமன்ற அலுவலகத்தின் தலைவர் டோரிஸ் லிப்ஷர், பெர்லின் நகரில் உள்ள ஆண் பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் நீதிமன்றத்தின் முடிவை மிகவும் வரவேற்கிறார்கள், மேலும் இது நீச்சல்குள ஊழியர்களுக்கு சட்டப்பூர்வ உறுதியை உருவாக்குகிறது” என்று கூறினார். முன்னதாக பெர்லிலினில் உள்ள நீச்சல் குளங்களில் தங்கள் அந்தரங்க அங்கங்களை வெளிப்படுத்தும் பெண்கள் தங்களை மூடிக்கொள்ளுமாறும் அல்லது குளத்தை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.சில சமயங்களில் அவர்கள் அங்கே திரும்பி வரவும் தடை விதிக்கப்பட்டது.

மேலும் இந்த புதிய குளியல் விதிகள் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று டோரிஸ் லிப்ஷர் கூறினார். பெர்லினில் உள்ள நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிக்கலாம் என்ற அறிவிப்பை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளதாக அந்நாட்டு அரசியல் வட்டாரங்களும் தெரிவித்துள்ளன

Kokila

Next Post

அதிர்ச்சி...! 20-வது மாடியில் இருந்து விழுந்த OYO நிறுவனர் உயிரிழப்பு...! போலீசார் தீவிர விசாரணை...!

Sat Mar 11 , 2023
ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால் ஹரியானா மாநிலம் குருகிராமில் மாடியில் இருந்து விழுந்து நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக குருகிராம் துணை காவல் கண்காணிப்பாளர் விஜ் கூறுகையில், நேற்று மதியம் 1 மணியளவில் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. ரமேஷ் அகர்வால், 20-வது மாடியில் இருந்து விழுந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின்போது உயிரிழந்த ரமேஷ் அகர்வாலின் மனைவி, மகன் ரிடேஷ் அகர்வால் மற்றும் ரிடேஷின் […]

You May Like