fbpx

சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த பெண், செய்த காரியம்..

தற்போது உள்ள காலகட்டத்தில், சர்க்கரை நோய் அனைவருக்கும் இருக்கும் ஒரு சாதாரண வியாதி ஆகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அநேகருக்கு இந்த சர்க்கரை நோய் உள்ளது. இந்நிலையில், சர்க்கரை நோயால் அவதி பட்டு வந்த பெண் ஒருவர் செய்த காரியம், பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நாங்குநேரி அருகே உள்ள முதலைகுளம், நடுத்தெருவை சேர்ந்தவர் 41 வயதான கவிதா. இவருக்கு 43 வயதான காமராஜ் என்ற கணவரும், 3 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த கவிதாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உடல் நலம் சரியாகவில்லை. இதனால் மனம் உடைந்த கவிதா, விரக்தியில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.

இவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் வீட்டிற்க்குள் சென்று பார்த்த போது, கவிதா உடல் கருகிய நிலையில் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு, நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் பலன் இன்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து, மூன்றடைப்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Maha

Next Post

பெற்றோர்களே கவனம்!! படிக்க லாயக்கில்லை என்று திட்டியதால், மாணவி செய்த காரியம்..

Sun Oct 1 , 2023
அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயில் காவல் சரகத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர், 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாணவியின் தந்தை உயிரிழந்த நிலையில், இவரது 17 வயது அண்ணன் குடும்ப செலவுகளை பார்த்து வந்துள்ளார். தனது தங்கை படிக்க வேண்டும் என்பதற்காக, அண்ணன் ஒரு சிகை அலங்கார கடையில், தனது படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு செல்கிறார். இந்நிலையில், சிறுமியின் தாய் வெளியே […]

You May Like