புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்ட அறிவிப்பில், யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் விதவைகளுக்கான நிதியுதவி ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார்.
இதேவேளை, விதவைகளுக்கான உதவித்தொகை 2000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
முன்னதாக புதுச்சேரியில் கடந்த மார்ச் 13ம் தேதி ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.12 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி சட்டப்பேரவையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.