fbpx

’வேலை தேடும் பெண்களே உஷார்’..!! வங்கிக் கணக்கில் இருந்து மாயமாகும் பணம்..!! இப்படியும் மோசடிகள் நடக்குது..!!

பட்டதாரி பெண்ணுக்கு, கனடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி செய்த உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் உட்பட இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா (25). பி.இ. பட்டதாரியான இவர், வெளிநாட்டில் வேலை தேடி ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்ட நபர், தான் இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதரகத்தின் துணை உயர் கமிஷ்னர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, கனடாவில் வேலை கிடைத்து விட்டது என தெரிவித்துள்ளார். இதையடுத்து, வேறு இரு நபர்கள் தொடர்பு கொண்டு, போலியாக உருவாக்கப்பட்ட பணி ஆணையை தபால் மூலம் அனுப்பி வைத்து வேலைக்கான டெபாசிட், விசா உள்ளிட்டவைகளுக்காக பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி பல தவணைகளாக ரூ.36 லட்சத்தை வெவ்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் பெற்றுள்ளனர்.

பின்னர், சந்தேகமடைந்த பவித்ரா, கனடா நாட்டில் வேலை என கொடுக்கப்பட்ட ஆணையை சரிபார்த்தபோது அவை போலியானது என தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர், புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், வழக்குப் பதிவு செய்து நைஜிரியாவைச் சேர்ந்த ரூபன் குட்நியூஸ் நாயிமிகா என்பவரை கடந்த டிசம்பர் 5ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து மர்ம நபர்கள் பயன்படுத்திய இ-மெயில் ஐ.பி. முகவரியைக் கொண்டு நடத்திய தொடர் விசாரணையில் பெங்களூருவில் இருந்து இ-மெயில் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், பெங்களூரு சென்று அங்கு, மறைந்திருந்த உகாண்டா நாட்டைச் சேர்ந்த நமேல் புரோசி (29), பெங்களூரைச் சேர்ந்த ராஜேஷ் (32) ஆகியோரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து இருவரிடம் இருந்து 6 செல்போன்கள் பறிமுதல் செய்து, கைது செய்யப்பட்ட இருவரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

நடுரோட்டில் சேவல் சண்டை.. தட்டிக்கேட்ட போலிசாருக்கு அடி,உதை.!

Fri Jan 27 , 2023
சென்னை அருகே அயனாவரம் பகுதியில் இறுதி ஊர்வலம் ஒன்று நடந்த போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து சென்று அங்கே பார்த்தபோது இறந்தவரின் உறவினர்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியவாறு சேவல் சண்டை நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து காவலர் திருநாவுக்கரசு அதை வீடியோ எடுத்த போது சேவல் சண்டையை நடத்தியவர்கள் திருநாவுக்கரசை தாக்கி இருக்கின்றனர். அதை தடுக்க […]
Viral..!! கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்த விடுமுறை கேட்டு விண்ணப்பித்த காவலர்..!!

You May Like