fbpx

பயணச்சீட்டு எடுப்பதில் ஏற்பட்ட தகராறு…..! நடத்துனரை வெளுத்து வாங்கிய பெண் காவலர் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி….!

உத்திரபிரதேச மாநிலம் ஜான்சியில் பயணிகளின் பயணத்தை ஸ்மார்ட்டாக மாற்றும் விதத்தில் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்சமயம் மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் நடத்த மறுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன. அந்த விதத்தில் பெண் காவலர் ஒருவர் பேருந்து நடத்துனரை தாக்கி தகாத முறையில் நடந்து கொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மாநகரப் பேருந்து நிலையத்திலிருந்து பருசாகர் நகருக்கு செல்லும் பேருந்தில் ஒரு பெண் காவலர் பயணம் செய்திருக்கிறார். அப்போது பயணச்சீட்டு எடுப்பது குறித்து நடத்துனருக்கும், பெண் காவலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பெண் காவலர் பயணச்சீட்டுக்கு 33 ரூபாய் பதிலாக இருபது ரூபாய் மட்டுமே கொடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே மீதி 13 ரூபாயை கொடுக்காமல் பிடிவாதமாக இருந்து வந்துள்ளார். அந்த பெண் காவலர் ஆகவே நடத்துனர் முழு கட்டணத்தையும் கேட்டதால் ஆத்திரம் கொண்ட அந்த பெண் காவலர், நடத்துனரை சரமாரியாக தாக்கி இருக்கிறார் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இரு தரப்பினரின் புகாரின் அடிப்படையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். பேருந்தின் நடத்துனரை பெண் காவலர் தாக்கியது ஏன் என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சட்டத்தை கையில் எடுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது விசாரணையில் தவறு யார் மீது இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

Next Post

தமிழ்நாட்டில் குட்கா, புகையிலைப் பொருட்கள் மீதான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!

Wed May 24 , 2023
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீதான தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டிருந்தது.  அதன்பிறகு தமிழ்நாட்டில் நிக்கோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலைப் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் ஓராண்டுக்கு தடை விதித்து உணவு […]
இனி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்றால்...! தமிழக அரசு பரபரப்பு அரசாணை..!

You May Like