பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
எஸ்.பி. முதல் ஐ.ஜி. வரையிலான காவல் அதிகாரிகளின் அலுவலகம், முகாம் அலுவலகங்களில் பெண் போலீசாரை பணியமர்த்தக் கூடாது என்று தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பெண் காவலருக்கு டிஐஜி மகேஷ் குமார் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாலியல் புகாரில் சிக்கிய டிஐஜி மகேஷ் குமார் மீது பெண் காவலர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். இதனை விசாரித்த விசாகா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் மகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் தான், காவல் அதிகாரிகளின் அலுவலகங்களில் பெண் போலீசாரை பணியமர்த்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Read More : மகா கும்பமேளா..!! 3 சிறப்பு தபால் தலைகளை வெளியிட்ட மத்திய அமைச்சர்..!! முக்கிய அம்சங்கள் என்ன தெரியுமா..?