fbpx

பெண்கள் உடலுறவு சம்மத வயதை 16ஆக குறைக்க சிந்திக்க வேண்டும்!… மத்திய அரசுக்கு ம.பி.,ஐகோர்ட் வலியுறுத்தல்!

பெண்களின் உடலுறவு ஒப்புதல் அளிக்கும் வயதை, 18ல் இருந்து 16 ஆக குறைப்பது குறித்து, அரசு சிந்திக்க வேண்டும் என மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் 20 வயது இளைஞனுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கில், பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, இது போன்ற வழக்குகளில் ஆண் பிள்ளைகள் மட்டும் குற்றவாளிகள் அல்ல, வயது காரணமாக ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுகின்றனர் என நீதிபதிகள் கூறினர். 2012இல் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தம் உடலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை 18 வயதாக அதிகரித்தது, சமூகத்தின் கட்டமைப்பை சீர்குலைத்துள்ளது என்று மத்திய பிரதேச உயர்நீதிமன்ற ஒற்றை அமர்வு நீதிபதி தீபக் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அவர், இப்போதெல்லாம், 14 வயதிற்குட்பட்ட ஒவ்வொரு ஆணும் பெண்ணும், சமூக ஊடக விழிப்புணர்வு காரணமாக பருவமடைகிறார்கள்.

இதன் காரணமாக ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு அதன் பின் இறுதியில் உடல் உறவுகளில் செல்ல வழிவகுக்கிறது. முன்னதாக கடந்த 2020இல் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கருவுற்றதாக குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் கைது செய்யப்பட்டு 3 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்பட்ட நிலையில் நீதிபதி, 20 வயது இளைஞருக்கு எதிரான எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்தார், மேலும் சம்பவம் நடந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கு 16 வயது, அவர் தனது வாழ்வைக் குறித்து முடிவெடுக்கும் திறன் கொண்டவர் என்பதை தர்க்கரீதியானதாகக் கருதுகிறது. இதில் ஆண்களின் தவறான நோக்கங்கள் எதுவும் இல்லை என்று தோன்றுகிறது எனக்கூறினார். மேலும் பெண்களின் உடலுறவு ஒப்புதல் அளிக்கும் வயதை, 18ல் இருந்து 16 ஆக குறைப்பது குறித்து, அரசு சிந்திக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

Kokila

Next Post

பொறியியல் மாணவர்கள் கவனத்திற்கு!... இன்று கலந்தாய்வு தொடங்குகிறது!

Sun Jul 2 , 2023
பொறியியல் படிப்புக்களில் சேர விண்ணப்பித்த சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து மாணவர்கள் மேற்படிப்புகளில் நீட் மருத்துவப்படிப்பு, பொறியியல் கல்லூரி மற்றும் பல்வேறு தரப்பட்ட துறை சார்ந்த படிப்புகளில் சேர்வதற்கான அடுத்தகட்ட முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்களில் 2,28,122 மாணவர்கள் […]

You May Like