fbpx

’ஓசி பஸ்ஸில் பயணிக்கும் பெண்கள்’..!! திமுக அமைச்சரின் பேச்சுக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!

அரசு விழாவில் பெண்களை ஓசி பஸ்ஸில் பயணிப்பவர்கள் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியது கண்டத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தபடி, மகளிர் இலவச பயணத்திற்காக இந்த ஆண்டு 1,600 கோடி ரூபாயை போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. அதன்படி  தமிழகத்தில் சாதாரண கட்டண அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதி அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர் பொன்முடி பேசிய வீடியோ ஒன்று வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோவில் பெண்கள் மத்தியில் பேசும் பொன்முடி, ‘இப்போ பஸ்ல எப்டி போறீங்க? இங்க இருந்து எங்க போக வேணும்னாலும் ஓசி. ஓசி பஸ்ல போறீங்க’ என்று பொன்முடி பேசியுள்ளார்.

’ஓசி பஸ்ஸில் பயணிக்கும் பெண்கள்’..!! திமுக அமைச்சரின் பேச்சுக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”அரசு விழாவில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து ‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்’ என்று அமைச்சர் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள காணொளி அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சரின் இந்தப் பேச்சு கண்டனத்திற்குரியது. பெண்கள் இலவசமாக அரசுப் பேருந்தில் பயணிக்கும்போது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், அவர்களை ஏளனமாக பேசக்கூடாது என முதலமைச்சர் முக.ஸ்டாலின் கூறியிருந்தார். இது அவர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? அமைச்சர்களுக்குப் பொருந்தாதா? மூத்த அமைச்சர் ஒருவரே இப்படி பேசுகிறார் என்றால் திமுகவினரின் உண்மையான மனநிலை எது என்பதை நம்மால் உணர முடிகிறது. பெண்களை இப்படி இழிவுபடுத்துவதும் திமுகவினர் கண்டுபிடித்திருக்கும் திராவிட மாடலின் அங்கம்தானோ? என்று குறிப்பிட்டுள்ளார். 

Chella

Next Post

செல்போன் கடையில் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள்…

Mon Sep 26 , 2022
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் சாலை ஓரத்தில் செல்போன்கடையில் வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வுகள் முறையாக நடத்தப்படவில்லை. 2 வருடமும் ஆல்பாஸ் அளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஓரிரு தேர்வுகளிலும் மாவட்ட அளவில் பொது வினாத்தாள் தயாரித்து அதை முதன்மை கல்வி அலுவலகர் , வட்டார கல்வி அலுவலர்களிடம் கொடுத்து பின்னர் வகுப்பில் மாணவர்களுக்கு தேர்வு எழுத கொடுக்கப்பட்டது. இந்நிலையில் […]

You May Like