மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டால் பெண்கள் ஆபத்தான முறையில் கிணற்றில் நீர் இறைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், நாசிக்கில் உள்ள பெயிண்ட் என்ற கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் சரிந்துள்ளதால் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் தடைபட்டுள்ளதோடு, கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் கிராமத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக பெண்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் செல்கின்றனர்.
கிணற்றை சுற்றி நின்று உயிரை பணயம் வைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ ஊடகங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக மகாராஷ்டிரா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.