fbpx

பேருந்தில் பயணிக்கும் பெண்களே உஷார்..!! இளம்பெண்ணை மிரட்டி 2 டிரைவர்கள் பலாத்காரம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் லலித், முகமது ஆரிப் ஆகியோர் ஓட்டுநர்களாக இருந்தனர். பஸ்சில் இருக்கைகள் அனைத்தும் பயணிகளால் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டது. இதனால், பஸ்சில் கூட்டம் அலைமோதியது. அந்த பஸ்சில் பயணிக்க விரும்பிய சில பயணிகளுக்கு இருக்கைகள் கிடைக்கவில்லை. இதையடுத்து பஸ்சில் டிரைவர் அருகே உள்ள கேபினில் சில பயணிகளை 2 டிரைவர்களும் அமர வைத்தனர்.

அப்போது இளம்பெண் ஒருவரும் பஸ் கேபினில் ஏறி அமர்ந்தார். இதையடுத்து கேபின் பகுதியில் இருந்த ஒவ்வொரு பயணிகளும் தங்களின் இடங்கள் வந்தவுடன் இறங்கி சென்றனர். ஒரு கட்டத்தில் கேபினில் 2 டிரைவர்களும் அந்த இளம்பெண் மட்டுமே இருந்தனர். பஸ் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது இரவு 7.30 மணியளவில் 2 டிரைவர்களும் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க தொடங்கினர். இருவரும் மாறி மாறி பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தனர். பஸ்சின் கேபினில் இருந்து உள்ளே இருக்கைக்கு செல்லும் இடத்துக்கான கதவு பூட்டப்பட்டு இருந்தது.

இதனால், கேபினில் நடக்கும் சம்பவம் பஸ்சின் உள்ளே இருக்கும் பயணிகளுக்கு தெரியவில்லை. இதற்கிடையே, பஸ்சின் கேபின் பகுதியில் இருந்து பெண் அலறும் சத்தம் கேட்டது. இதையடுத்து, உள்ளே இருந்த பயணிகள் கேபின் கதவை வலுக்கட்டாயமாக திறந்து பார்த்தனர். அப்போது தான் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை தெரியவந்தது. இதையடுத்து, சக பயணிகள் 2 டிரைவரையும் பிடித்து சரமாரியாக தாக்கி பெண்ணை மீட்டனர். இதற்கிடையே டிரைவர் லலித் அங்கிருந்து தப்பித்துவிட்டார். டிரைவர் முகமது ஆரீப்பை பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

கேரளாவில் தொடர் அச்சம்!… பாதிப்பு எண்ணிக்கை கண்டறிவது மேலும் அதிகரிப்பு!… கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்சரிக்கை!

Mon Dec 18 , 2023
கேரளாவை அச்சுறுத்திவரும் ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்த நிலையில், வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கண்டறியப்படுவது மேலும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 346 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் 1,324 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் […]

You May Like