fbpx

ஆண்களைவிட பெண்களின் உடலே அதிகளவிலான மதுவை உறிஞ்சுகிறதாம்!… பாதிப்புகளும் அதிகம்!…

இந்திய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையத்தின் ஆய்வறிக்கையின்படி, பெண்களின் உடல் அமைப்பு மற்றும் ரசாயன மாற்றங்கள் ஆகியவை ஆண்களை காட்டிலும் வேறுபடுகிறது. இதனால் பெண்களின் உடலானது ஆண்களை காட்டிலும் கூடுதலான மதுவை உறிஞ்சி கொள்கிறது. ஆணும், பெண்ணும் சம அளவிலான மதுவை அருந்தினாலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் இரத்தத்தில் மதுவின் அளவு கூடுதலாக இருக்கிறதாம். மேலும் நீடித்த விளைவுகள் மற்றும் பாதிப்புகள் அதிகமாக உள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

மதுவால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து புனேயில் உள்ள பொது மருத்துவர் சுதா சேசாய் கூறுகையில், “மது அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் தீங்குகளை கணக்கில் கொள்ளும் போது ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு மிக மோசமான விளைவுகள் உண்டாகும். மதுவால் உடல் உறுப்புகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள், போக்குவரத்து விபத்துக்கள், உளவியல் ரீதியான சிக்கல்கள் ஆகியவை ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மிக கூடுதலாகவே இருக்கின்றன என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன ஒரே எடை கொண்ட ஆண்களை காட்டிலும் பெண்களின் உடலில் நீர்ச்சத்து மிக குறைவாக இருக்கும். இதனால் அவர்களது உடல் மதுவை கூடுதலாக உறிஞ்சும்.

மதுவின் நச்சுகளை பெண்களின் உடல் வெளியேற்றும் திறன் ஆனது குறைவாக உள்ளது. இதனால் கல்லீரல் பாதிப்பு விரைவாக உண்டாகும். பெண்களின் இனப்பெருக்கத்திற்கு உதவும் ஹார்மோன் ஓஸ்ட்ரோஜன் காரணமாக அவர்களுக்கு மதுவால் ஏற்படும் பாதிப்புகள் கூடுதலாக இருக்கும். கல்லீரல் கொழுப்பு பாதிப்பு நோய் உண்டாகும். எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை முடிவுகளில் மது அருந்தும் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு மூலை பாதிப்பு கூடுதலாக இருக்கிறது என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக மூளையின் அளவு சுருங்குகிறதாம்.

Kokila

Next Post

2024ல் நீட் தேர்வு ரத்தாகும் - முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

Sun Aug 20 , 2023
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் உண்ணாவிரத போராட்டத்தை சிறப்பாக நடத்திய உதயநிதிஸ்டாலின் மாற்ற அமைச்சர்களையும் பாராட்டி அறிக்கை ஒன்றை முதலவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார் முதலவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வை விள்ளக்கவேண்டியது அரசியல் கோரிக்கை அல்ல, கல்வி கோரிக்கை, அதிலும் குறிப்பாக சமூக சமத்துவம் கல்வியை விரும்பும் அனைவரின் கோரிக்கை ஆகும். இது திமுகவின் கோரிக்கை அல்ல, அனைத்து மக்களின் கோரிக்கை. மிக உறுதியாக சொல்கிறேன் 2024ல் […]

You May Like